பொதுவாக அன்னாசி பழத்தினை ஜூஸாகவோ அல்லது துண்டு துண்டுகளாகவோ சாப்பிட்டால் நம் மூட்டு வலி வராமல் தடுக்கும் ,இதன் ஆரோக்கிய நன்மைகளை நாம் காணலாம்
1.இப்பழம் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் .
2.காயங்களை விரைவில் ஆற்றுகின்றது,எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது,
3.இதில் உள்ள அதிகமான நார்ச்சத்து,உடல் எடையை குறைக்க உதவும் ,எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவுக்கிறது .
4.அன்னாசி பழம் சாப்பிட்டால் உடலில் உள்ள கழிவுகள்,தோலின் உள்ள கழிவுகள் போன்றவற்றை சிறுநீர் மூலம் வெளியேறி உடல் ஆரோக்கியமாக விளங்கும்.
5.அன்னாசி பழ துண்டுகளை கால் பாதத்தில் வளரும் ஆணிகள் மற்றும் உடலில் தோன்றும் மருக்கள் போன்றவற்றில் வைத்து கட்டினால் நாளடைவில் அது குணமாகும்.
6.அசைவ உணவு சாப்பிடும் போதோ அல்லது விருந்து போன்ற மிதமிஞ்சிய உணவு உண்ட பிறகு அவை உடனடியாக செரிமானமாக ஒரு டம்ளர் அன்னாசி பழ ஜூஸ் குடித்தால் போதும் நல்லா ஜீரணிக்கும்
7.நீண்ட நாள் மலச்சிக்கல் உள்ளவர்கள் உணவிற்குப் பிறகு ஒரு டம்ளர் அன்னாசி பழ ஜூஸ் அல்லது துண்டுகள் சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் மலச்சிக்கல் குணமாகி நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்க செய்கிறது
Tags:
உடல் நலம்