பிஎஸ்என்எல் நிறுவனம் இம்மாதம் முதல், நாடு முழுவதும் 4ஜி சேவைகளை வழங்கி வருகிறது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பிஎஸ்என்எல் 4ஜி படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, பிஎஸ்என்எல் மொபைல் சிம்கார்டுகள், ரீசார்ஜ் கூப்பன்கள், பிற தொடர்புடைய சேவைகளை விற்பனை செய்வதற்கான உரிமையாளராக புதிய வணிகக் கூட்டாளிகளை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக, தொழில்முனைவோர்பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உரிமையாளராகப் பதிவு செய்து கொள்ளலாம்.
இதன்படி விழுப்புரம், செஞ்சி, திருச்செந்தூர் மற்றும் திருப்பத்தூர் பகுதிகளுக்கு, ஆர்வமுள்ள நிறுவனங்கள் தொலைத் தொடர்பு, எஃப்எம்சிஜி, எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் ஆகிய தயாரிப்புகளின் விநியோகஸ்தராக கடந்த 5 ஆண்டுகளில் 3 வருட அனுபவத்துடன் ரூ.50 லட்சம் விற்று முதலுடன் பங்கேற்கலாம்.
அதேபோல், கடலூர், மதுரை மேற்கு, தூத்துக்குடி பகுதிகளுக்கு, குறைந்தபட்ச விற்றுமுதல் மற்றும் அனுபவம் உள்ள நிறுவனங்களுக்கு முறையே ரூ.30 லட்சம் மற்றும் கடந்த 4 ஆண்டுகளில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு வரும் செப். 12-ம் தேதி மதியம் 2 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும்,விவரங்களுக்கு, https://www.tamilnadu.bsnl.co.in/tenderlistCircle.aspx என்ற தளத்தைப் பார்க்கலாம் என, பிஎஸ்என்எல்தமிழ்நாடு வட்டம் தெரிவித்துள்ளது.
Tags:
பொதுச் செய்திகள்