இத்தனைப் பிரச்சினைகளையும் தீர்க்கும் ஒரே பூ


பொதுவாக செம்பருத்தி பூவில் நமக்கு ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இந்த பூவின் ஆரோக்கியம் பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம் 

1.வெறும் வயிற்றில் இந்த பூவை மென்று தின்றால் இதய நோய் குணமாகும் .

2.மேலும் இதை ஜூஸ் செய்தும் குடித்து வரலாம் .இந்த பூவின் மூலம் இதய நோயாளிக்கு வரும் படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சினைகளையும் குணப்படுத்தலாம் ,

3.மேலும் மாத விடாய் கோளாறு முதல் இளநரை போன்ற பிரச்சினைகளையும் இந்த பூ குணப்படுத்தும்

4. செம்பருத்திப் பூவை அரைத்து 150 மி.லி நல்லெண்ணெய்யில் இட்டு காய்ச்சி வடிகட்டிய பிறகு தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

6.வாரம் ஒருமுறை செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து சீயக்காய் போட்டு அலசினால் கூந்தல் அடர்த்தியாக வளர்ந்து ஆரோக்கியம் சேர்க்கும்

7.கறிவேப்பிலை, சின்ன வெங்காயத்தை உலர்ந்த செம்பருத்தி பூவுடன் சேர்த்து நன்றாக அரைத்து அத்துடன் பசும்பால் , நல்லெண்ணெய் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் கூந்தல் கருமையான நிறத்துடன் வளர்ந்து நம் ஆரோக்கியம் சிறக்கும்

8.தினமும் 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறால் உண்டாகும் வயிற்று புண் முதல் வாயில் உண்டாகும் புண் வரை குணமாகும்
Previous Post Next Post