இந்து பாரம்பரியத்தில் துளசிக்கு தனி இடம் உண்டு. ஆனால் ஆரோக்கியமாக இருக்க துளசி இலைகளை தினமும் சாப்பிடுங்கள் என்கிறார்கள்.
துளசி இலையில் நார்ச்சத்து, புரதம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் டி போன்ற சத்துக்கள் உள்ளன. அவை பல நோய்களைக் குணப்படுத்துகின்றன. இது பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. துளசி இலைகளுடன், துளசி நீரும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இதை காலையில் குடித்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இந்த கட்டுரையில் துளசி நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
துளசியில் வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது. இது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
துளசி நீரை அதிகாலையில் குடிப்பதால் செல்களின் செயல்பாடு அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.துளசியில் உள்ள கேம்பீன், சினோல், யூஜெனால் நெஞ்சு சளியை குறைக்கிறது.
துளசி இலையின் சாற்றில் தேன் மற்றும் இஞ்சி சேர்த்து குடித்து வந்தால், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, காய்ச்சல், இருமல், சளி போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம்.
துளசி நீரை குடிப்பதால் இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து குறைகிறது. இஸ்கிமியா, பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் இதய நோய்களைக் குறைக்கிறது.
துளசியில் ஒசிமுமோசைடுகள் ஏ மற்றும் பி கலவைகள் உள்ளன. இது மன அழுத்தத்தை குறைக்கிறது.துளசி நீர் மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளான செரோடோனின் மற்றும் டோபமைனை சமன் செய்கிறது.
துளசியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தை சாதாரணமாக வைத்திருக்கும்.
துளசி நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பற்கள் மற்றும் ஈறுகள் வலுவடையும். இது வாய் புண்களை குணப்படுத்துகிறது மற்றும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Tags:
உடல் நலம்