அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகையான இறைச்சி தான் கோழி அல்லது சிக்கன்.
ஏழை எளியோர் கூட வாங்கி சாப்பிடக்கூடிய வகையில் விலைக் குறைவில் சிக்கன் விற்கப்படுவதால், இது உலகளவில் பெரும்பாலானோர் அதிகம் சாப்பிடக்கூடிய ஒரு இறைச்சியாக உள்ளது.
மற்ற இறைச்சிகளைப் போன்றே சிக்கனும் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்குகின்றன. என்ன தான் சிக்கனில் புரோட்டீன், கார்போஹைட்ரேட்டுகள், பல வகையான வைட்டமின்கள் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருந்தாலும், இந்த சிக்கனை அதிகம் சாப்பிடுவதால் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பல மோசமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
முக்கியமாக சிக்கனின் குறிப்பிட்ட சில பாகங்களை உண்பது மிகவும் ஆபத்தானதாக கூறப்படுகிறது. சரி, எந்த மாதிரியான சிக்கன் பாகங்களை ஒருவர் உட்கொள்ளக்கூடாது என்று நீங்கள் கேட்கலாம்.
என்ன தான் சிக்கன் சாப்பிடக்கூடிய ஒன்றாக இருந்தாலும், அதன் அனைத்து பாகங்களும் சாப்பிட ஏற்றதல்ல. சில பாகங்களை உண்ணும் போது, அவை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். இப்போது சிக்கனின் எந்த பாகங்களை ஒருவர் சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.
சிக்கன் நுரையீரலில்
சிக்கனின் நுரையீரலில் நிறைய ஒட்டுண்ணிகள் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கும். இந்த சிக்கன் நுரையீரலை என்ன தான் கழுவி, அதை உயர் வெப்பநிலையில் வேக வைத்தாலும், அதன் சக்திவாய்ந்த எதிர்ப்பின் காரணமாக அந்த கிருமிகளை அகற்ற முடியாது. எனவே சிக்கன் நுரையீரலை உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.
சிக்கனின் கழுத்து
சிக்கனை சாப்பிடுபவர்கள், அதன் கழுத்துப் பகுதியை சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. ஏனெனில் சிக்கனின் கழுத்தில் நச்சுக்கள் மற்றும் கிருமிகள் அடங்கிய நிணநீர் முனைகள் உள்ளன. எனவே இந்த சிக்கனின் கழுத்துப் பகுதியை அடிக்கடி உட்கொண்டால், அது புற்றுநோயின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே இந்த பகுதியை உட்கொள்வதையும் தவிர்த்திடுங்கள்.
சிக்கனின் தலை
சிக்கன் பிரியர்கள் பலரும் அதன் தலையையும் சாப்பிடுவதுண்டு. ஆனால் சிக்கனின் தலையை எப்போதும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதன் தலையில் மனித ஆரோக்கியத்தை அழிக்கும் சில ஆபத்தான பொருட்கள் குவிந்துள்ளன. எனவே தெரியாமல் கூட சிக்கன் தலையை வாங்கி சாப்பிட்டுவிடாதீர்கள்.
சிக்கன் குடல்
சிக்கனின் குடலில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் உள்ளன. என்ன தான் அதன் குடலை சுத்தமாக கழுவினாலும், அதில் உள்ள நச்சுக்களை முழுமையாக அகற்ற முடியாது. முக்கியமாக சிக்கனின் குடலை உட்கொண்டால், அது இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களை அதிகரிக்க செய்து, இதய நோயின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
சிக்கன் தோல்
சிக்கன் சாப்பிடும் பலர் அதன் தோலை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் சிக்கனின் தோலில் எந்த ஒரு சத்தும் இல்லை. சொல்லப்போனால் அதில் கொழுப்புக்கள் தான் அதிகம் இருக்கும். அதோடு அதன் மேல் தோலில் பல ஒட்டுண்ணிகள் மற்றும் கிருமிகள் அதிகம் இருக்கும். எனவே இனிமேல் சிக்கன் வாங்கினால், அதன் தோலை நீக்கிவிட்டு, பின் சமைத்து சாப்பிடுங்கள்.
சிக்கன் கால்கள்
சிக்கனின் கால்களை அதிகம் உட்கொண்டால், அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். மேலும் சிக்கனின் கால்களில் பல ஹார்மோன்கள் உள்ளன. இந்த ஹார்மோன்களை அதிகம் எடுக்கும் போது, அது உடலின் ஆரோக்கியத்தை அழித்து, பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வைத்துவிடும்.
சிக்கன் பிட்டம்
சிக்கனை சாப்பிடுவர்கள், அதன் பிட்டத்தை அறவே தவிர்க்க வேண்டும். இது சிக்கனின் மிகவும் ஆபத்தான பகுதியாகும். இதை மனிதர்கள் உட்கொண்டால், அது உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவும். எனவே இந்த பகுதியையும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
Tags:
உடல் நலம்