இன்று முதல் பத்திரப்பதிவுக்கு இது கட்டாயம்... தமிழக அரசு அதிரடி உத்தரவு!


தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் தொழில்நுப்டம் மற்றும் மேம்பாடு அடிப்படையில் புதிய நடைமுறைகள் அவ்வப்போது அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பத்திரப்பதிவு துறை மொத்தமுமாக ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகின்றன. பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்யப்படும் சொத்து விவரங்கள் தானியங்கி முறையில் ஆன்லைன் பட்டா மாற்றம் செய்யப்படுகின்றன.அந்த வகையில், 100 சதவீதம் தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, பதிவுத்துறை, வருவாய் துறை திட்டமிட்டு வருகிறது. இதனையடுத்து கடந்த மாதத்திலேயே சார்பதிவாளர்கள், ஆவண எழுத்தர்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் கிரையம் மற்றும் உரிமை மாற்றம் செய்யும் நபர் பெயரில் பட்டா இருப்பதை தவறாமல் உறுதி செய்து கொள்ள வேண்டும். பத்திரப்பதிவின்போது, சரியான மொபைல் போன் எண்ணை அளிக்க வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.


தானியங்கி முறை பட்டா மாறுதல் திட்டத்தில், பெரும்பாலான விண்ணப்பங்கள் பாதியில் முடங்கி விடுகின்றன. விண்ணப்பங்களில், சொத்து வாங்குவோர் தங்களது சரியான செல்போன் போன் எண்ணை கொடுக்காமல் இருப்பதே, விண்ணப்பங்கள் முடங்கிப்போவதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவுக்கு விபரங்களை உள்ளீடு செய்யும்போது, சொத்து வாங்குவோரின் உண்மையான மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். பத்திரப்பதிவு பணியின் போது, மொபைல் போன் எண் விபரத்தை சரியாக பதிவிடுவதை, சார்பதிவாளர்கள், ஆவண எழுத்தர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசு ஆன்லைன் மூலம் பட்டா பெறுவதற்கு செல்போன் நம்பர் கட்டாயம் என அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் நிலம் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு e services என்ற ஆன்லைன் தளம் செயல்பாட்டில் இருந்தாலும், இதன் மூலம் இலவசமாக ஆவணங்களை பெறும் சிலர், அதனை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆன்லைன் மூலம் பட்டா, சிட்டா மற்றும் பட்டா நகல் போன்றவைகளை பெறுவதற்கு செல்போன் நம்பர் அவசியம் என தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் இந்த புதிய அறிவிப்பு தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து வெளியாகியிருக்கும் அறிக்கையில், https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் பட்டா, சிட்டா, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நிலம் விவரம், வரைபட விவரங்கள், பட்டா நகல், பட்டா விண்ணப்பம் நிலை, நகர நில அளவை, புலப்பட அறிக்கையை எளிதாக பெறலாம். இந்த இணையதளத்தில் கிடைகக்கும் சேவைகளை சிலர் தவறாக பயன்படுத்துவாக தொடர் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அதாவது இங்கிருந்து இலவசமாக பதிவிறக்கும் செய்யும் ஆவணங்களை சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசு இந்த இணையதளத்தை வணிக நோக்கத்திற்கும் மோசடிகளுக்கும் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று முதல் இந்த இணையதளத்திலிருந்து பட்டா, புலப்படங்கள் என அனைத்து சேவைகளையும் பெற செல்போன் எண் கட்டாயமாகும். செல்போன் எண்ணை பதிவு செய்தால், அந்த எண்ணுக்கு ஓடிபி மெசேஜ் வரும். அதனை பதிவு செய்தால்தான் ஆவணங்களை பதிவிறக்கம் செயய முடியும். ஒருவர் ஒரு செல்போன் எண் மூலம் அதிகமாக 8 ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நடைமுறை ஆகஸ்ட் 23ம் தேதி இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post