இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சர்க்கரை நோயை முழுவதுமாக குணப்படுத்துவது கடினம் என்றாலும், அதனை கட்டுக்குள் வைப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.
இன்சுலின் உற்பத்தி குறையும் போது அல்லது இல்லாத போது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இன்சுலின் என்பது கணையத்தில் இருந்து சுரக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். இது நமது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் இன்சுலின் குறைபாடு ஏற்பட்டு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் நிலை தான் நீரிழிவு நோய்
இரத்த சர்க்கரை அளவு தொடர்ச்சியாக உயர் நிலையில் இருந்தால், உடல் உள் உறுப்புகள் குறிப்பாக, இதயம், கண்கள் சிறுநீரகம் ஆகியவை பாதிக்கும் ஆபத்ட்து உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வீட்டு வைத்தியங்கள் மற்றும் உணவு கட்டுப்பாடு மூலமாகவே, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம் (Diabetes Control Tips). அந்த வகையில் இன்சுலின் செடி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அருமருந்தாகச் செயல்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாகும் இன்சுலின் செடி இலைகள்
இன்சுலின் செடி ஒரு மருத்துவ தாவரமாகும். மருந்து தயாரிப்பிலும் பயன்படுகிறது. காஸ்டஸ் இக்னியஸ் என்ப்படும் இன்சுலின் செடி இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் உள்ளதோடு, சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கிறது. காலையில் எழுந்தவுடன் இதன் இலைகளை மென்று சாப்பிட்டால் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை கரைத்து, அதிகப்படியான அளவை உறிஞ்சுகிறது.
புளிப்பு சுவை கொண்ட இன்சுலின் இலைகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக அமையும் இன்சுலின் செடியின் இலைகள் புளிப்புச் சுவை கொண்டது. நீங்கள் காலையில் தண்ணீருடன் அவற்றை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு செடியின் இரண்டு இலைகளை சுத்தம் செய்து அரைத்து அதை ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைத்து, காலையிலும் மாலையிலும் தொடர்ந்து குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். இதன் இலைகளை உலர்த்தி பொடி செய்து, தினமும் ஒரு ஸ்பூன் பொடி சாப்பிடுவதும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இன்சுலின் செடி ஒரு புதர் செடி என்பதால், அதை வீட்டில் நட்டு வளர்த்து அதன் இலைகளை தினமும் சாப்பிடலாம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இன்சுலின் இலைகள்
இன்சுலின் இலையில் பத்துக்கும் மேற்பட்ட சத்துக்கள் காணப்படுகின்றன. புரதங்கள், ஃபிளாவனாய்டுகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பீட்டா கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், கார்போலிக் அமிலம், டெர்பெனாய்டுகள் ஆகியவை ஏராளமாக உள்ளதால், இதனை சாப்பிடுவது, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. கொலஸ்ட்ராலுக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது.
இன்சுலில் செடி இலையில் உள்ள புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், அஸ்கார்பிக் அமிலம், இரும்புச்சத்து, ஃபிளவனாய்டுகள், பிட்டா கரோட்டின் மற்றும் கார்சோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காரணமாக நீரிழிவு நோய் மட்டுமின்றி, நுரையீரல், செரிமானம் மற்றும் கண் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
Tags:
உடல் நலம்