நடமாட்டத்தை முடக்கும் கீல்வாதம் இந்த உணவுகள் மூலம் நிவாரணம் காணலாம்

மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் பல வித நோய்கள் நம் உடலை எளிதாக தாக்குகின்றன.

ஏற்கனவே இருக்கும் நோய்களின் தீவிரமும் சில நேரங்களில் இந்த காலத்தில் அதிகமாவதுண்டு. மாறிவரும் இந்த பருவத்தில், அதிக மக்கள் மூட்டுவலியையும் எதிர்கொள்கிறார்கள். முன்னர், முதியவர்கள் மட்டுமே மூட்டு வலியால் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், இன்றைய காலத்தில் இளைஞர்களிடமும் இது காணப்ப்படுகின்றது.

பலரை பாடாய் படுத்தும் இந்த மூட்டு பிரச்சனைகளில் கீல்வாதமும் ஒன்று. மனிதர்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. மனிதர்களின் நடமாட்டத்தை முடக்கக்கூடிய ஆபத்தான நோயாகும் இது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள், நடக்கவும், அமரவும், எழவும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதாலும் இந்த நோய் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால், அது மூட்டு வலி உட்பட பல பிரச்சனைகளை உருவாக்கும். ஆகையால், அதை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும். யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தி கீல்வாத பிரச்சனையை போக்க உதவும் சில உணவுகள் பற்றி இங்கே காணலாம்.

பால் பொருட்கள்

கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பால் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உடலில் கால்சியம் குறைபாட்டை பூர்த்தி செய்து எலும்புகளில் ஏற்படும் வலியை குறைக்கிறது.

ஆளி விதைகள்

கீல்வாத பிரச்சனையில் யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த ஆளி விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவற்றில், நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பல ஆண்டி-ஆக்சீடெண்ட் பண்புகள் உள்ளன. இவை உங்கள் எலும்புகளை பலப்படுத்த உதவுகின்றன.

பச்சை காய்கறிகள்

கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பச்சை காய்கறிகள் மிகவும் நன்மை பயக்கும். இவை மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.

பழங்கள்

கீல்வாத பிரச்சனை உள்ளவர்கள் சாத்துக்குடி, நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற பழங்களை உட்கொள்ளலாம். இவை கீல்வாதத்தில் மிகவும் நன்மை பயக்கும். இந்த பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.

இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது

சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள்

மூட்டுவலியில் இருந்து விடுபட, சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க்க வேண்டும். உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் மூட்டுவலி அதிகரிக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சிவப்பு இறைச்சி

கீல்வாதத்தைத் தவிர்க்க, பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும் சிவப்பு இறைச்சியையும் உட்கொள்ள வேண்டாம். இவற்றால், யூரிக் அமில அளவும் அதன் விளைவால் கீல்வாதமும் அதிகமாகலாம்.

தானியங்கள்

மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்கள் கோதுமை, சோளம், மைதா மாவு போன்றவற்றை உட்கொள்ளக்கூடாது. இவை வலியை இன்னும் அதிகமாக்கும்.

தாவர எண்ணெய்

கீல்வாதத்திற்கு தாவர எண்ணெயை உட்கொள்ள வேண்டாம். இதில் ஒமேகா-6 மற்றும் ஒமேகா 3 கொழுப்புகள் உள்ளன. இவற்றால் பிரச்சனை பெரிதாகலாம்.

உப்பு உட்கொள்ளலை குறைக்க வேண்டும்

மூட்டுவலி உள்ளவர்கள் உப்பை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆகையால் உப்பின் அளவில் கட்டுப்பாடு அவசியம்.

கொழுப்புள்ள உணவுகள்

கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி உடலில் கொழுப்பு சேரும். இவை அனைத்தும் கீல்வாத வலியை அதிகரிப்பதொடு, கீல்வாதம் குணமடையும் வேகத்தையும் குறைக்கின்றன.
Previous Post Next Post