உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நீரேற்றமாக இருப்பது அவசியம். உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லையென்றால், எல்லா வகையான நோய்களையும் உண்டாக்கும்.
உடலின் கட்டுமானத்தில் நீர் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது.
தண்ணீர் பற்றாக்குறையால் ஒற்றைத் தலைவலி, அஜீரணக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், சைனசிடிஸ், நுரையீரல் காசநோய், உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.
நம் உடலானது 70 சதவீதம் தண்ணீரால் உள்ளது. எனவே, ஒருநாளைக்கு நீங்கள் போதிய அளவு தண்ணீர் எடுத்துகொள்வது மிக முக்கியம். காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது பலரது பழக்கம். ஆனால் அவ்வாறு செய்வதால் பல நன்மைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
காலையில் எழுந்தவுடன் சராசரியாக ஒருவர் 650 மில்லி லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.இது கிட்டத்தட்ட 3 கிளாஸ் தண்ணீரின் அளவுக்கு சமமாகும். எனவே, காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பார்ப்போம்.
காலையில் தண்ணீர் குடிப்பதால் இது உடலின் மெட்டபாலிச சக்தியை அதிகரிக்க உதவும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், செரிமான மண்டலத்தை செயல்படுத்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் தண்ணீர் குடிப்பது பலனளிக்கும். சிறுநீரகத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க தண்ணீர் உதவுகிறது.மேலும், இது தண்ணீர் சருமத்தை நீரேற்றமாக வைத்து பளபளப்பாக்குகிறது.
காலையில் தண்ணீர் குடிப்பதால், உடலை நீரேற்றமாக வைத்து, நாள் முழுவதும் உற்சாகமாக உணர்கிறீர்கள். தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. எடை குறைக்க உதவுகிறது.
Tags:
உடல் நலம்