கருஞ்சீரகம் மூலம் குணமாகும் நோய்கள்

கருஞ்சீரகமும், கருஞ்சீரக எண்ணெயும் ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் பல நோய்களை தீர்க்க பயன்படுத்தப்படுகின்றன.

அவ்வாறான கருஞ்சீரகம் மூலம் குணமாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

சிலருக்கு ஸ்கின் பிரச்சினை இருக்கும். அவர்கள் கருஞ் சீரகத்தை நல்லெண்ணையில் அரைத்து, சரும நோய்களான கரப்பான், சிரங்கு, இவற்றுக்கு பூச, நல்ல நிவாரணம் கிடைக்கும். சில பெண்களுக்கு சினைப்பை கட்டிகள் இருக்கும் . இந்த கட்டிகளுக்கும், கொப்பளங்களுக்கும் இந்த கருஞ்சீரக எண்ணெய் பலனளிக்கும்

சிலருக்கு முகப்பரு இருக்கும். அவர்கள் 2 ஸ்பூன் கருஞ்சீரகத்துடன் பசும்பால் சேர்த்து நன்கு மைய அரைத்து முகத்தில் பூசி ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பரு மறைந்து முகம் பளிச்சிடும்.

சிலருக்கு தலை முடி கொட்டும். அவர்களுக்கும் இளவயதில் தலை முடி நரைத்தல் உள்ளவர்களுக்கும் கருஞ்சீரக எண்ணெய்யை நன்கு தேய்த்து வருவதால் இதனைத் தடுக்கமுடியும்.

சிலருக்கு லேசான ஜூரம் இருக்கும். இதற்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்து. தலைவலி, கீழ் வீக்கம் இவற்றுக்கு விதைகளை வெந்நீரில் இட்டு அரைத்து பூசலாம்.
Previous Post Next Post