தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலமாக பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.
இந்த பணம் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலமாக பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. அதன்பிறகு பெண்கள் நலனுக்காக இலவச பேருந்து பயணம், சுயதொழில் தொடங்க உதவித்தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தற்போது இந்த திட்டத்தில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு அரசு மற்றும் தனியா நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் தவிர மற்றும் அனைவரும் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் புதிதாக திருமணமான பெண்கள், அரசு பணியில் பணிபுரிந்து இறந்த ஆண்களின் மனைவிகள் உள்ளிட்டரும் இனி மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டால் இன்னும் பல பெண்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
உதவித்தொகை