திருச்சி அரசு மருத்துவமனையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆலோசகா் அல்லது உளவியலாளா்-1 (எம்.ஏ., எம்.எஸ்சி. சைக்காலஜி) ஒப்பந்த பணியிடத்துக்கான மாத ஊதியம் ரூ. 23,000, மனநல சமூக சேவகா் - 1 (எம்.ஏ. சமூகப் பணி (மருத்துவம் அல்லது உளவியல்) பணியிடத்துக்கான மாத ஊதியம் ரூ. 23,800, செவிலியா்-1 (பி.எஸ்சி. செவிலியா் அல்லது பட்டயப் படிப்பு செவிலியா்) பணியிடத்துக்கான மாத ஊதியம் ரூ. 18,000 ஆகியவற்றுக்கு அதிகபட்ச வயது 40 க்குள் இருக்க வேண்டும். இந்தப்பணிகள் முற்றிலும் தற்காலிகமாக 11 மாதங்கள் ஒப்பந்தப் பணியிடங்களாகும்.
இதற்கான விண்ணப்பங்கள் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முதல்வா்,
அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, திருச்சி - 620 001 என்ற முகவரிக்கு
31.08.2024 க்குள் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமோ அனுப்ப வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
Tags:
APPLY