எல்லா நோய்களுக்கும் காரணம் மது மற்றும் புகைப்பழக்கம் என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர். அது உண்மையாக இருக்கலாம், ஆனால் அந்த பழக்கம் இல்லாதவர்களும் இன்றைய காலகட்டத்தில் பல்வெறு நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
இதற்கு அவர்களின் வாழ்க்கை முறை, அதிக கலோரி நிறைந்த உணவு மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். மது அருந்தாமல் இருந்தாலும் பலருக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கல்லீரலில் கொழுப்பு குவிதல்
கொழுப்பு கல்லீரல் நோய் உண்மையில் உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. இது மது அருந்துபவர்களிடமும். காணப்படுகிறது. கொழுப்பு கல்லீரல் நோய் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் ஏற்படுகிறது. இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் (alcohol fatty liver) நோய் மற்றொன்று நான் ஆல்கஹாலிக் கொழுப்பு கல்லீரல் நோய். (non alcohol fatty liver). அதிக குடிப்பழக்கத்தால் அவர்கள் கல்லீரலில் கொழுப்பு படிந்தால், அது ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கப்படுகிறது. மது அருந்தாமல் இருந்தாலும் கல்லீரலில் கொழுப்பு சேருவதை நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் நோய் என்று சொல்வார்கள்.
இந்த இரண்டு பிரச்சனைகளும் தீவிரமானவை. அடிப்படையில் எந்த முக்கிய அறிகுறிகளையும் காட்டாது. நோய் முற்றும்போது, அறிகுறிகள் தீவிரமடைகின்றன. கல்லீரல் முற்றிலும் சேதமடையலாம். மது அருந்துபவர்கள் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் மதுவுக்கு அடிமையாகாதவர்கள் கூட பாதிக்கப்படுவது ஏன் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிலருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், செரிமான பிரச்சனைகள், மது அருந்தாமல் இருந்தாலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருக்கும். இந்தப் பிரச்சனைகள் கல்லீரலில் கொழுப்புச் சேர்வதற்கும் வழிவகுக்கும்.
கொழுப்பு கல்லீரல் நோய், உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மதுப் பழக்கம் இல்லாவிட்டாலும் கொழுப்பு நிறைந்த உணவுகள், நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள், சர்க்கரை உணவுகள், உடற்பயிற்சியின்மை, எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவை கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும். எனவே அனைவரும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் பொதுவாக அறிகுறியற்றது. எனவே தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
காணக்கூடிய அறிகுறிகள்
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகாவிட்டாலும், சில வகையான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகக் கவனிக்க வேண்டும். ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகள், திடீர் எடை இழப்பு, மிகவும் சோர்வாக உணர்தல், தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம் மற்றும் அடிவயிற்றின் வலது பக்கத்தில் வலி ஆகியவை அடங்கும்.
கொழுப்பு கல்லீரல் நோய் சிகிச்சைக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளல் அவசியம். இதை தவிர்க்க முன்கூட்டியே கவனித்தால் மிகவும் நல்லது. கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரை, குளிர்பானம், உப்பு ஆகியவற்றைக் குறைக்க வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். வெளியில் கிடைக்கும் தின்பண்டங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிக எடையை கண்டிப்பாக குறைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நாம் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.
Tags:
உடல் நலம்