தைராய்டு பிரச்சனை தவிர்க்க, சாப்பிட வேண்டிய உணவுகள்!


பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்னையாக ஹைப்பர் தைராய்டு உள்ளது.நம் உடலில் உள்ள எண்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் ஒரு வகை பிரச்சனையே தைராய்டு நோய்வர காரணமாகிறது.


இரண்டு வகையான தைராய்டு கள் உள்ளன. ஹைப்பர் தைராய்டிஸம், ஹைப்போ தைராய்டு. இதில் ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரக்கும் நிலை. ஹைப்பர் தைராய்டில் தைராய்டு ஹார்மோன் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக சுரக்கும்.

தைராய்டு பிரச்னைகள் சில நோய் அறிகுறிகள் மூலம் வெளிப்படும். உடல்சோர்வு, மலச்சிக்கல், சளி, சரும வறட்சி, தலைவலி, வேகமான இதயதுடிப்பு, வேர்த்துக் கொட்டுவது, மனஅழுத்தம், எடை குறைதல் போன்றவை உண்டாகும்.

இதை மருத்துவ கண்காணிப்போடு, சிலவகை உணவுகளில் கவனமாக இருந்தால் ஹைப்போ தைராய்டை தடுக்கலாம். பனீர், முட்டைக்கோஸ், சர்க்கரை வள்ளிக்கிழங்கு பீச், ஸ்ட்ராபெர்ரி, நட்ஸ் வகைகளை தவிர்க்க வேண்டும். ஹைப்பர் தைராய்டு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவாக அயோடின் குறைவான உணவை சொல்லலாம். அயோடின் உப்பை குறைக்க வேண்டும். முட்டை வெள்ளைக்கரு, ஃப்ரெஷ் பழங்கள், உப்பு இல்லாத நட்ஸ், உப்பு இல்லாத ப்ரெட்,பால் சார்ந்த பொருட்கள், ப்ரோக்கலி, முளைகட்டிய தானியங்கள், காலிபிளவர், கடுகு போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம்

இரும்புச்சத்து குறைவாக இருந்தால் ஹைப்பர் தைராய்டு வரும். எனவே நட்ஸ், முட்டை, கோழிகறி, மீன், கீரை, முழு தானியங்கள், பீன்ஸ் போன்ற இரும்புச்சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளவேண்டும்.

செலினியம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். பிரௌன் அரிசி, சூரியகாந்தி விதை, மஷ்ரூம், பால், யோகர்ட், வாழைப்பழம், பூண்டு போன்றவற்றில் செலினியம் நிறைந்துள்ளது.

தைராய்டு சுரப்பியை ஆரோக்யமாக வைக்க துத்தநாகம் உதவும். zinc நிறைந்த இறைச்சி உணவுகள், மத்தி மீன், பருப்பு வகைகள், முட்டை தானியங்கள், நட்ஸ், பால், டார்க் சாக்லெட் சாப்பிட வேண்டும்.
Previous Post Next Post