தமிழகத்தில் சொந்த வீடு கட்டுவோருக்கு இ சேவை மையம் மூலமாக சுயசான்றிதழ் கட்டிட அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இனி வீடு கட்ட அனுமதி பெற வேண்டுமென்றால் இ சேவை மையங்களுக்கு சென்று பொதுமக்கள் சுய சான்றிதழ் கட்டிட அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
இருப்பினும் ஏதேனும் தவறு நடந்து விடும் என்று அச்சத்தில் பொதுமக்கள் இன்ஜினியர்கள் மூலமாக விண்ணப்பம் செய்கிறார்கள். அவர்கள் அரசு கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதனை தடுப்பதற்கு தான் தற்போது அரசு ஆன்லைன் மூலமாக சுய சான்றிதழ் கட்டட அனுமதி பெறும் முறையை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது.
Tags:
பொதுச் செய்திகள்