பெண்களுக்கு தையல் இயந்திரம் வாங்க 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் மத்திய அரசு திட்டம் குறித்து பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடியால் 17.09.2023 அன்று தொடங்கிவைக்கப்பட்டது தான் விஸ்வ கர்மா திட்டம். 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன
பாரம்பரிய கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதையும், அவர்களின் தயாரிப்புகளை உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு கொண்டு செல்வதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 18 வகையான கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் பயனடைவார்கள். பயனாளிகளுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, பயிற்சியின் போது, தினமும், 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், கருவிகள் வாங்க 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். பயனாளிகள் ரூ.3 லட்சம் வரை பிணையில்லாக் கடன் பெற தகுதியுடையவர்கள்.
பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தையல் மிஷின் வாங்குவதற்காக ரூ.15,000 வழங்குகிறது. இந்த பணத்தை பெறுவதற்கு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே தையல் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் ஆதார், வங்கி பாஸ் புக், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு https://pmvishwakarma.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Tags:
பொதுச் செய்திகள்