தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான பயிற்சி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 412 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பயிற்சி பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 02.09.2024 கடைசி தேதியாகும்.
Trade Apprentice
காலியிடங்களின் எண்ணிக்கை: 412
Medical Lab Technician (Pathology) - 5
Medical Lab Technician (Radiology) - 3
Fitter - 62
Turner - 25
Welder - 62
Mechanic (Motor Vehicle) - 62
Mechanic (Diesel) - 5
Mechanic (Tractor) - 3
Electrician - 87
Wireman - 62
Plumber - 3
Carpenter - 3
Stenographer - 10
Computer Operator and Programming Assistant (COPA) - 20
கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023/ 2024 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெடிக்கல் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பில் உயிரியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை: ரூ. 10,019
வயது தகுதி: 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: சம்பந்தப்பட்ட கல்வி தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.09.2024
மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
Tags:
வேலைவாய்ப்பு