இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை என்பது அதிகரித்து வருகிறது.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது. அதேசமயம் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கிறது. அதன் பிறகு ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் செல்போன் நம்பருக்கு போலியாக குறுஞ்செய்திகள் அனுப்பி வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தேவையில்லாமல் வரும் குறுந்தகவல்கள் மற்றும் லிங்க் போன்றவற்றிற்கு பொதுமக்கள் பதிலளிக்கக்கூடாது எனவும் அந்த லிங்கை தொடக்கூடாது எனவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
அதாவது வங்கிகளில் இருந்து மெசேஜ் அனுப்புவதாக கூறி போலியான செய்திகள் அனுப்பி பணம் பறிக்கிறார்கள். இதனை தடுப்பதற்காக இனி வங்கிகளில் இருந்து அனுப்பப்படும் குறுந்தகவல்களை நிறுத்த டிராய் முடிவு செய்துள்ளதாம். அதன்படி வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் URL மற்றும் ஓடிடி லிங்குகள் கொண்ட எஸ்எம் எஸ்களை தடுக்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய உத்தரவு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் மொபைல் நிறுவனங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் வங்கிகள் தொடர்பான குறுந்த தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு செல்லாது. மேலும் இந்த புதிய உத்தரவால் செப்டம்பர் 1 முதல் இ-காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து வரும் எஸ்எம்எஸ் வராது என்று கூறப்படுகிறது.
Tags:
பொதுச் செய்திகள்