கூகுள் தந்த வார்னிங்.. செப்.,20க்குள் இதை செய்யுங்க! இல்லைனா ஜி மெயில் அக்கவுண்ட் டெலிட் ஆகிடும்


உலகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ள பல கோடி ஜி-மெயில் அக்கவுண்ட்டுகளை செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதில் உங்களின் ஜி-மெயில் அக்கவுண்ட் கூட இருக்கலாம். இதனால் செப்டம்பர் 20ம் தேதிக்குள் இந்த முக்கிய விஷயத்தை செய்தால் ஜி-மெயில் அக்கவுண்ட்டை கூகுள் நீக்குவதை தடுத்து விடலாம்.

தற்போது நாம் அனைவருமே இ-மெயில் (Gmail) பயன்படுத்தி வருகிறோம். தற்போது பள்ளி மாணவர்கள் முதல் வயதானவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி இ-மெயில் பயன்படுத்தி வருகிறோம். கல்லூரி மற்றும் பணி இடங்களில் இந்த ஜி-மெயில் என்பது மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது.

இதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் ஜி-மெயிலில் கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் பலரும் தங்களின் ஜி-மெயில் முகவரியை பயன்படுத்துவது இல்லை. அதேபோல் இறந்தவர்களின் ஜி-மெயில் முகவரியும் அப்படியே இருக்கும்.

இது ஜி-மெயில் சேவையை வழங்கும் கூகுள் நிறுவனத்தின் சர்வரில் அதிக இடத்தை பிடித்துள்ளது. இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் ஜி-மெயில் சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பயன்பாட்டில் இல்லாத ஜி-மெயில் முகவரிகள் டெலிட் செய்யப்பட்டு வரும். அந்த வகையில் இந்த ஆண்டும் செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு உலகம் முழுவதும் பலகோடி ஜி-மெயில் அக்கவுண்ட்டுகள் டெலிட் செய்யப்பட உள்ளன.

அதாவது கடந்த 2 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத ஜி-மெயில் கணக்குகளை நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பணி என்பது வரும் செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு தொடங்க உள்ளது. மேலும் குறிப்பிட்ட இ-மெயில் முகவரி நீக்கப்படும் பட்சத்தில் அதில் இருக்கும் ஆவணங்கள், டிரைவ், மீட், காலண்டர், கூகுள் போட்டோஸ் என அனைத்தும் மீண்டும் கிடைக்காது.

இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் நாம் நமது ஜி-மெயில் அக்கவுண்ட்டை ஆக்டிவ்வாக வைத்திருக்க வேண்டும். அதாவது கடந்த 2 ஆண்டுகளாக நாம் ஜி-மெயில் அக்கவுண்ட்டை பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட இப்போது உடனே அதனை பயன்படுத்தி வந்துள்ள மெயிலை படித்தால் போதும். இல்லாவிட்டால் அந்த ஜி-மெயில் அக்கவுண்ட்டில் இருந்து இன்னொரு ஜி-மெயில் முகவரிக்கு மெயில் அனுப்பினால் போதும். இப்படி செய்யும்பட்சத்தில் நமது ஜி-மெயில் கணக்கு டெலிட் செய்யப்படாமல் தப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post