மத்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை தற்போது SSC வெளியிட்டுள்ளது.
அதன்படி 39,481 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இந்த கான்சடபிள் பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18 முதல் 23 ஆகும்.
இந்தப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.21,600 முதல் ரூ.69,100 வரை சம்பளம் கிடைக்கும். இந்த தேர்வுக்கு ssc.gov.in என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 14 ஆகும். இந்த தேர்வு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Tags:
வேலைவாய்ப்பு