வெற்றியை வீடு தேடி வரவைக்கும் 5 தினசரி பழக்கங்கள்!!

எந்த ஒரு விஷயமும் நாம் சிரமப்படாமல் கிடைக்காது என பலர் சொல்லி கேட்டிருப்போம்.

அதிலும் நமக்கு வாழ்வில் குறிக்காேள், கனவு, லட்சியம் என்ற ஒன்று இருந்து விட்டால் இன்னும் மோசம். நம் மனமும் உடலும் வருந்தி, அதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே அந்த விஷயத்தை நாம் எட்ட முடியும். ஒரே இரவில் எதுவும் மாறிவிடாது, ஒவ்வொரு நாளும் நாம் எடுக்கும் முயற்சிகளை வைத்துதான், நமது வெற்றி நம் கைக்கு கிடைப்பதும், கிடைக்காமல் பாேவதும் இருக்கிறது. எனவே, நாம் நினைத்த காரியத்தில் வெற்றியடைய, சில விஷயங்களை நாம் தினசரி செய்ய வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?

சமூகத்துடன் ஒற்றுமை:

சமூகம் என்றால், ஒட்டுமொத்த சமூகம் அல்ல. நம் வாழ்வில் மிக முக்கியமாக இருக்கும் உறவுகளுடன் நாம் ஒற்றுமையுடன் இருப்பதுதான்.நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோருடனான உறவை நாம் நாளுக்கு நாள் மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அவர்களுடன் ஒன்றாக நேரம் செலவிடுவது, அவர்களுடன் பேசுவது, அனைத்து தருணங்களிலும் ஆதரவாக நிற்பது ஆகியவை இதில் அடங்கும். இந்த வகையான இணைப்புகள் நம்மை மகிழ்ச்சியாக்குவதுடன், வாழ்வை பல்வேறு நபர்களின் பார்வையில் இருந்தும் நம்மை பார்க்க வைக்கும்.

உடற்பயிற்சி:

உடற்பயிற்சி செய்வதால் உடல் நலன் மட்டுமல்ல, மன நலனும் மேம்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தினமும் நாம் உடற்பயிற்சி செய்வதால் நமக்கு எண்டார்ஃபின்ஸ் எனும் ஹார்மோன்கள் சுரக்கிறது. இது, மன அழுத்தத்தை குறைத்து, மனநிலையை மேம்படுத்தும். எனவே, தினமும் 30 நிமிடங்கள் ஜாக்கிங், யோகா, வேகமாக நடைப்பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றால் மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது, உங்களின் நினைவாற்றலை அதிகரித்து கவனச்சிதறலை தடுக்கும்.

தினமும் படிக்க வேண்டும்:

உங்களால் முடிந்த, உங்களுக்கு பிடித்த விஷயங்களை நீங்கள் தினமும் படிப்பது அவசியம் ஆகும். அது, புத்தகம் படிப்பதாக இருக்கலாம். நாளிதழ், இணைப்பிதழ், இணையதளத்தில் இருக்கும் ப்ளாக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இப்படி நாம் தினமும் படிப்பதால் நமது பேச்சுத்திறன் மற்றும் மொழித்திறன் வளருவதோடு, நம்மையும் தனியொரு வெற்றியாளராக மாற்றிவிடும்.

இலக்கை நிர்ணயித்தல்:

இலக்கு என்பது, ஒன்றாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவை வெவ்வேறாக கூட இருக்கலாம். ஆனால், நாம் எதையெல்லாம் சாதிக்க விரும்புகிறோமோ, அது குறித்த தெளிவான பார்வை மற்றும் கற்பனை நமக்கு இருத்தல் அவசியம் ஆகும். இப்படி நாம் கனவு கண்டால் மட்டுமே, வெற்றியாளராக உருவாக முடியும். இதை நீங்கள் ஒரு போர்டில், டைரியில் எழுதி வைத்து தினமும் அதை எடுத்து பார்க்கலாம்.

சரியான தூக்கம்:

இப்போதைய டிஜிட்டல் உலகில், பலர் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாகி இரவு முழுவதும் அதையே தங்களின் துணையாக ஆக்கிக்கொள்கின்றனர். இதனால், தினமும் 7-8 மணி நேரம் நன்றாக தூங்குவதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும். தூங்கினால்தான், நமது உடல், மனம், மூளைக்கு சரியான ஓய்வு கிடைக்கும். அப்போதுதான், நீங்கள் வெற்றி பெற நினைக்கும் காரியமும் உங்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். காலையிலேயே எனர்ஜியுடன் இருக்க நீங்கள் நன்றாக உறங்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
Previous Post Next Post