தமிழக அரசில் சர்வேயர், டெக்னீசியன் வேலை.. 861 பணியிடங்கள்!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சர்வேயர், உதவி சோதனையாளர், உதவி பயிற்சி அலுவலர், டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருந்தது.

மொத்தம் 861 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், வயது வரம்பு என்ன?, எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கு பார்க்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பி வருகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது உரிய அறிவிப்புகளை வெளியிட்டு, தேர்வு நடத்தி பணியாளர்களை நியமனம் செய்து வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் தமிழக அரசின் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்தது. எந்தெந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. கல்வி தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்: தொழில் நுட்ப உதவியாளர் (தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி கழகம்) நில அளவர், இளநிலை வரைவு தொழில் அலுவலர், இளநிலை தொழில் நுட்ப உதவியாளர், சிறப்பு பணி பார்வையாளர், சர்வேயர், உதவி சோதனையாளர், உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து ஆங்கிலம்), திட்ட உதவியாளர், மோட்டார் வாகன ஆய்வாளர், வரைவாளர், விடுதி கண்காணிப்பாளர் & உடற்பயிற்சி அலுவலர், தொழில் நுட்ப உதவியாளர் , உதவி வேளாண்மை அலுவலர் மேற்பார்வையாளர் நெசவு (04) என மொத்தம் 861 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி: பணியிடத்திற்கு ஏற்ப கல்வி தகுதியானது மாறுபடும். ஐடிஐ / டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். துறை சார்ந்த பிரிவில் தொழிற்கல்வி பாடப்பிரிவை எடுத்து படித்திருப்பது அவசியம். எடுத்துக்காட்டாக நில அளவர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ அல்லது ஐடிஐ- பிரிவில் அளவை பிரிவில் தொழிற்பயிற்சி பெற்றவர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பிக்க முடியும். கல்வி தகுதி குறித்த முழுமையான விவரங்களை தேர்வு அறிவிப்பில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை மோட்டார் ஆய்வாளர் பணியை தவிர அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயதினை பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். மோட்டார் ஆய்வாளர் பணிக்கு மட்டும் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 34. அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணிக்கு அதிகபட்ச வயது வரம்பானது 32 ஆகும். உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து ஆங்கிலம்) உள்ளிட்ட பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 37. அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

விண்ணப்பிப்பது எப்படி?: தேவையான கல்வி தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்துக் கொள்ளவும்.


விண்ணப்பிக்க கடைசி நாள்: விண்ணப்பிக்க நாளை (11.9.2024) தான் கடைசி நாள் ஆகும். எனவே தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். தேர்வானது இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் தாள் தேர்வு வரும் 09.11.2024 அன்றும் இரண்டாம் தாள் தேர்வு 11/11/2024 - 14/11/2024 வரை நடைபெறும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க:

https://www.tnpsc.gov.in/Document/tamil/CTSE_DIP_Tamil_13.08.2024_.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH
Previous Post Next Post