தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சூப்பரான செய்தியை தெரிவித்துள்ளார்.
அதாவது தமிழகம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பாடத்தை முழுமையாக கொண்டு வர முயற்சிகள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, இந்த வருடம் நவம்பர் மாதத்திற்குள் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் மற்றும் ஹைடெக் லேப்புகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விடும். மேலும் இவை அனைத்தும் அடுத்த கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
Tags:
கல்விச் செய்திகள்