மூலநோய் மற்றும் குடல் புண் போன்ற நோய்களால் அவதிப்படுவோருக்கு உதவும் கீரை

பொதுவாக ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு நோயை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு .ஆனால் மாறி வரும் உணவுப்பழக்கத்தால் இன்றைய தலை முறையினர் கீரைகளை சாப்பிடுவதில்லை .

இந்த பதிவில் வெந்தய கீரை மூலம் குணமாகும் நோய்கள் பற்றி பார்க்கலாம்

1.வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மற்றும் தீப்புண்கள் மீது பூசினால் வீக்கம் தீப்புண்களும் குணமாகும்.

2.மூலநோய், குடல் புண் போன்ற நோய்களால் அவதிப்படுவோர் இந்தக் கீரையை உண்டால் அந்த நோய்கள் குணமாகும்

3. வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளதால் அவற்றை உண்போருக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும் .

4.இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் சுகர் அளவு குறையும் .

5.வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது.

6.வெந்தயக் கீரை வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

7.வெந்தய கீரை சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்து,மூளை நரம்புகளைப் பலப்படுத்தும் ஆற்றல் கொண்டது
Previous Post Next Post