நீரிழிவு நோயாளிகள் இட்லி, தோசை சாப்பிடும்போது பெரும்பாலும் தேங்காய் சேர்த்து சட்னியை பயன்படுத்துகிறார்கள்..
இது நல்லதா? கெட்டதா? சர்க்கரை நோயாளிகள் தேங்காய் சாப்பிடலாமா? எந்த வடிவத்தில் தேங்காயை உணவில் எடுத்து கொள்ளலாம்.
நீரிழிவு நோயாளிகளை பொறுத்தவரை, சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அதேசமயம், உணவுப் பழக்கத்திலும் முறையான நேரத்தையும், முறையான உணவையும் கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது. அதிக அளவு சிறுநீர் கழிப்பதும், உடல் சோர்வுகளும் நீரிழிவுகளுக்கு இருக்கும் என்பதால், கவனமுடன் உணவை எடுத்துக் கொள்ள வேண்டியது உள்ளது.
எதை சாப்பிட்டாலும் சுகர் ஏறிவிடுவதாக ஒரு கலக்கம் இருந்து கொண்டே இருப்பதையும் தவிர்க்க முடிவதில்லை. இந்த லிஸ்ட்டில், பீட்ரூட், வேர்க்கடலை, தேங்காய் போன்றவற்றை சேர்க்கலாம்.
பீட்ரூட்: நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடலாமா? என்ற சந்தேகம் நிறைய பேருக்கு உள்ளது. தித்திப்பு நிறைந்த காய் என்றாலும், தீங்கு விளைவிக்காத இயற்கை சர்க்கரை பீட்ரூட்டில் உள்ளது. அதுவும் இல்லாமல், பீட்ரூட்டில் ஏராளமான நார்ச்சத்துக்கள் உள்ளன..
மேலும், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துகளும் அதிக அளவில் உள்ளதால், டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பீட்ரூட் மிகவும் நல்லது என ஆய்வுகளும் சொல்கின்றன. எனவே, உணவுக்கு முன்பு, பீட்ரூட் சாப்பிட்டால், கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
வேர்க்கடலை: வேர்க்கடலைகளும் மிகவும் நன்மை தரக்கூடியதுதான். இதுவும் தித்திப்பு சுவையை தரக்கூடியவை என்றழலும், சர்க்கரையின் அளவு இதில் குறைவு என்பதுடன், இதிலுள்ள மெக்னீசியம், இன்சுலினை சுரக்க செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி, சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
வேர்க்கடலையில் ஆரோக்கியமான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் அடங்கியிருப்பதால், சர்க்கரையை கட்டுப்படுத்தக்கூடிய பண்பு இதில் உள்ளதாக் ஆய்வுகள் கூறுகின்றன. அதனால், பெண்கள், 25 கிராம் வேர்க்கடலையும், ஆண்கள் 38 கிராம் வேர்க்கடலையும் சாப்பிடலாம்.. சிலருக்கு வேர்க்கடலை அர்ஜியை தந்துவிடும் என்பதால், அவர்கள் தவிர்க்கலாம். மற்றபடி, சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வேர்க்கடலையை குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வரலாம்.
நார்ச்சத்துக்கள்: தேங்காய்களை சாப்பிட்டால் , சர்க்கரை அதிகரித்துவிடுமோ என்ற பயம் உள்ளது.. தேங்காயில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.. கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் C, B காம்ப்ளக்ஸ், இன்னும் பல ஊட்டச்சத்துகள் உள்ளதால், யாருமே தேங்காயை தவிர்க்கக்கூடாது என்கிறார்கள். முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான நார்ச்சத்தும், கார்போஹைட்டுகளும்தான். இவை இரண்டுமே தேங்காயில் இருப்பதால், ரத்த சர்க்கரை அதிகரிப்பதும் தடுக்கப்படுகின்றன.
ஆனால், தேங்காயிலிருந்து பால் எடுத்து சாப்பிடாமல், தேங்காயுடன் சேர்த்து மென்று சாப்பிடும்போது, நார்ச்சத்து முழுமையாக கிடைக்கிறது.. ஆனால், எவ்வளவு தேங்காயை சாப்பிடுகிறோம் என்ற அளவுகோலும் முக்கியம்.
தேங்காய்: 100 கிராம் தேங்காயில் 444 கலோரிகள் உள்ளன.. அதேபோல, 4.5 கிராம் புரோட்டீனும் நார்ச்சத்தும் உள்ளன.. இதுவே கொப்பரை தேங்காயில் 660 கலோரிகள் இருக்கின்றன, எனவே, சர்க்கரை நோயாளிகள் தினமும் தேங்காய் சட்னி, தேங்காய் துவையல் போல சமையலில் சேர்த்து கொள்ளாமல், பொரியல்களில் துருவிப்போட்டு சாப்பிடலாம். வெறும் தேங்காயை அப்படியே சாப்பிட கூடாது.
தேங்காய் போலவே இளநீரும் நன்மை தரக்கூடியது. இயற்கையாகவே சர்க்கரை கூறுகள் இளநீரில் உள்ளதால், குறைந்த அளவில் எடுத்து கொள்ளலாம். இது சிறுநீரகத்துக்கு நல்லது. சிறுநீரக கற்கள் இருந்தாலும் அது கரைந்து வெளியேற்றிவிடும்.. வாரத்திற்கு 3 முறை, ஒரு டம்ளர் இளநீர் குடிக்கலாம்.
தேங்காய் பால்: தேங்காய் பால் தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் தேங்காய் பாலில் நார்ச்சத்து நீக்கப்படுவதால் இதில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் மட்டுமே மிச்சமாகிறது. மேலும் இதன் கிளைசெமிக் இன்டெக்சும் 97 ஆக உயர்ந்து விடுவதால் இது நீரிழிவி நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையை அதிகரித்து, பாதிப்பை தந்துவிடும்.
Tags:
உடல் நலம்