விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல்: பூரணம் கொழுக்கட்டை இப்படி செய்து பாருங்க!


அரிசி மாவில் செய்யப்படும் முக்கிய உணவுப்பொருள் கொழுக்கட்டை. குறிப்பாக போகி பண்டிகை மற்றும் விநாயகர் சதூர்த்தி உள்ளிட்ட விஷேஷ நாட்களில் இந்த கொழுக்கட்டை செய்து சாமிக்கு படைப்பது வழக்கமான ஒரு நிகழ்வு.

அந்த வகையில் செப்டம்பர் 7-ந் தேதி விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில், நீங்கள் ஈஸியாக செய்ய தகுந்த 2 பூர்ணம் கொழுக்கட்டை ரெசிபி இந்த பதிவில் பார்ப்போம்.

பூர்ணம் செய்ய தேவையான பொருட்கள்:

பொட்டுக்கடலை - ஒரு கப்.
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
வெல்லம் - ஒரு கப்
நெய் அல்லது எண்ணெய் - 2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - ஒரு கப்
கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்
அரிசி மாவு - ஒரு கப்
நெய் - ஒரு டீஸ்பூன்
மைதா மாவு - 2 டீஸ்பூன்

செய்முறை

முதலில் பொட்டுக்கடலை, ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்ந்து நன்றாக மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு வெள்ளத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு ஒரு பானில், நெய் அல்லது எண்ணெய் விட்டு, அதில் துருவிய தேங்காய் சேர்ந்து நன்றாக வதக்கவும். அதன்பிறகு, பொட்டுக்கடலை ஏலக்காய் சேர்ந்து அரைத்த பவுடரை அதனுடன் சேர்ந்து வெல்ல கரைசலையும் சேர்க்கவும்.

இந்த கலவை கெட்டியாகும் வரை அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கிளரவும். இந்த கலவை கெட்டியானதும் அதை தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, அடுத்து ஒரு பானில், அரிசி மாவை சேர்ந்து நன்றாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு அதே பானில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில், மைதாமாவு கரைசலை சேர்க்கவும். இந்த கரைசல் நன்றாக கலந்தவுடன், அதில் நெய், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து, அதன்பிறகு வறுத்து எடுத்து வைத்துள்ள அரிசி மாவை சேர்த்து, நெய் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.

அதன்பிறகு மாவை சிறிது சிறிதாக உருட்டி ஒரு வாழை இலையில் என்னை தடவி, அதில் அந்த மாவை பதமாக வைத்து, அதில் ஏற்கனவே செய்து வைத்துள்ள பூரணத்தை நடுவில் வைத்து இலையை மடித்தால், கொழுக்கட்டை ரெடி. இப்படி செய்து இடியாப்பம் அல்லது இட்லி பானையில் வேக வைத்து எடுத்தால் பூரணம் கொழுக்கட்டை தயார்.

கடலைப்பருப்பு பூரணம்

கடலைப்பருப்பு - ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்
துருவிய தேங்காய் - ஒரு கப்
ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

கடலைப்பருப்பை நன்றாக வேக வைத்து மிக்சியில் அரைத்து தனியாக எடுத்தக்கொள்ளவும். அதன்பிறகு தனியாக ஒரு பானில, ஒரு கப் வெல்லம் தண்ணீர் சேர்த்து பாகு போல் காய்ச்சி எடுத்துக்கொண்டு அதில், துருவிய தேங்காய், அரைத்து வைத்திருக்கும் பருப்பு, ஏலக்காய் தூள், என அனைத்தையும் சேர்த்து கெட்டி பதத்திற்கு வரும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இறுதியாக கெட்டி பதம் வந்தால், அதை எடுத்து கொழுக்கட்டைக்கு பயன்படுத்தலாம்.

மேலே சொன்னபடி கொழுக்கட்டை மாவை பதமாக பிசைந்து, கிண்ணம் அளவில் பிடித்து அதில் இந்த கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து கொழுக்கட்டை செய்யலாம்.
Previous Post Next Post