இதய ஆரோக்கியம் முதல் குடல் ஆரோக்கியம் வரை செம்பருத்தி! பூக்களில் பொதிந்துள்ளது நற்குணங்கள்!

குடல் ஆரோக்கியம்

ஒரு ஆரோக்கியமான குடல் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியமானது ஆகும்.

அப்போதுதான் நாம் உண்ணும் உணவில் இருந்து நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். எனவே உங்கள் குடல் மற்றும் செரிமான எண்சைம்களுக்கு ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் தேவை. இது உங்கள் குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்துக்கு நல்லது. செம்பருத்தி பூவில் அதிகளவில் கால்சியச்சத்துக்கள் உள்ளன. அது உங்கள் செரிமான எண்சைம்களை இயங்கச் செய்கின்றன. இது உங்கள் குடலில் செரிமான எண்சைம்களை சுரக்கச் செய்கிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்களும் உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

நோய் எதிர்ப்பாற்றல்

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் இருந்தால்தான் அது உடலை கிருமிகள் நெருங்கவிடாமல் காக்கும். எனவே உங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் சிறப்பாக இயங்கள் உங்களுக்கு சரிவிகித உணவு மற்றும் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களை தேவையான அளவு எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. குறிப்பாக இரும்புச்சத்துக்கள் சீரான நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு தேவை. செம்பருத்தியில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது உங்கள் உடலுக்குள் செல்லும் கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. ரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தி ஆகியவற்றுக்கு இரும்புச்சத்துக்கள் உதவுகிறது. இதனால் உடலில் போதிய அளவு ஆக்ஸிஜன் கடத்தப்படுகிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு உதவுகிறது.

ஆரோக்கியமான பளபளக்கும் சருமம்

பாலிஃபினால்கள் மற்றும் ஆந்தோசியானின்கள் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செம்பருத்தி பூவில் அதிகம் உள்ளது. இவைதான் சிவப்பு, பர்பிள் மற்றும் ஊதா நிற பூக்களுக்கு அந்த வண்ணத்தைக் கொடுக்கின்றன. அந்த நிறங்கள் இருந்து அது ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பூக்கள் என்று பொருள். இது உடலில் உள்ள ஃப்ரிராடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. உடலில் உள்ள ஃப்ரி ராடிக்கல்கள் உங்கள் கொலாஜென்களை சேதப்படுத்துகின்றன. இது உங்கள் சருமத்தை வறண்டு போகச் செய்கிறது. முகத்தில் சுருக்கங்கள், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமலும், வயோதிக தோற்றம் இளம் வயதிலேயே ஏற்படாலும் காக்கிறது. எனவே ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவு உட்கொள்ளும்போது, உங்களின் சரும சேதம் தடுக்கப்படுகிறது. குறிப்பாக நாள்பட்ட சேதங்கள் குறைகிறது.

சோர்வைக் குறைக்கிறது

சோர்வு அதிகரிக்கும்போது ஏற்படும் மயக்கம் உறக்கம் மற்றும் ஓய்வால் குணமாவதில்லை. பெரும்பாலானவர்கள் சோர்வு மறறும் மயக்க பிரச்னைகளால் அவதியுறுகிறார்கள். எனவே ஆரோக்கியமான உணவுக மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகள் ஆகியவை உதவினாலும், இரும்புச்சத்துக்கள் குறைபாட்டாலும் சோர்வு ஏற்படும். செம்பருத்தியில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இதை எடுத்துக்கொள்ளும்போது உங்களின் உடல் சோர்வைப் போக்குகிறது.

தாவர புரதம்

செம்பருத்தி பூவில் தாவரப்புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளன. புரதம் உங்கள் உடலில் உள்ள செல்கள் இயங்கவும், அமைப்புக்கும் உதவுகிறது. எனவே நீங்கள் போதிய அளவு புரதச்சத்துக்களை எடுத்துக்கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். இது உங்கள் வளர்ச்சி மற்றும் உடலில் உள்ள திசுக்கள் மற்றும் பாகங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் சிறந்தது. தசைகளின் வளர்ச்சிக்கும் புரதச்சத்துக்கள் மிகவும் முக்கியம். செம்பருத்தி பூ பொடியில் கால்சியம் அதிகம் உள்ளது. அது தசைகளை இயங்கச் செய்ய மிகவும் தேவையாகும். இது உடற்பயிற்சிக்கு முன்னரும், பின்னரும் மிகவும் தேவையான ஒன்று ஆகும்.

ஆற்றல் அளவு

செம்பருத்தி பூவில் இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது உடலில் ஆற்றல் வளர்சிதையை ஊக்கப்படுத்துகிறது. எனவே தினமும் செம்பருத்தி பூக்களை உங்கள் உணவில் சேர்ப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

மூளை ஆரோக்கியம்

மூளை ஆரோக்கியமாக இருந்தால்தான் நமது சிந்தனை தெளிவாக இருக்கும். மேலும் உங்களால் கற்கவும், விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளவும் மூளை முக்கியம். மூளை வளர்ச்சி என்பது குழந்தைகளுக்கு பள்ளிகளில் சாதனைகள் புரியவும், வயோதிகர்களுக்கு நினைவாற்றல் இழப்பை தவிர்க்கவும் மிகவும் அவசியம். எனவே செம்பருத்தியில் உள்ள இரும்புச்சத்துக்கள் உங்கள் மூளையின் ஆற்றலை அதிகரிக்கச்செய்கின்றன.

ஆரோக்கியமான எலும்புகள்

நமது எலும்புகள்தான் நமது உடல் அமைப்புக்கு காரணமாகின்றன. நமது மூளையை பாதுகாக்கின்றன. இதயம் மற்றும் மற்ற உறுப்புகளில் காயங்கள் ஏற்படாமல் தடுக்கின்றன. எனவே எலும்பு ஆரோக்கியம் என்பது நாம் வளரும் காலத்திலும் வயோதிக காலத்திலும் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். குழந்தைகளுக்கு எலும்பு வளரவும், எலும்பை நன்றாக பராமரிக்கவும் வேண்டியது அவசியம். மெனோபாஸ்க்கு முந்தைய காலத்தில் உள்ள பெண்களுக்கு எலும்பில் உள்ள மினரல்கள் குறையாமல் செம்பருத்தி பூவில் உள்ள கால்சியம் சத்துக்கள் பார்த்துக்கொள்கின்றன.

ஆரோக்கியமான பற்கள்

உங்கள் பற்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் தேவையானது கால்சியம், செம்பருத்தியில் உள்ள கால்சியச் சத்துக்கள் அதற்கு உதவுகிறது.

உங்கள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செம்பருத்திகள், இது அதிகம் உட்கொள்ளப்படும்போது அதை அதிகளவில் பயிரிடும் விவசாயிகக்கும் நன்மையைத் தருகிறது. எண்ணற்ற நன்மைகள் நிறைந்த செம்பருத்தி பூக்களை கட்டாயம் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Previous Post Next Post