புரட்டாசி முதல் சனிக்கிழமையில் செய்ய வேண்டிய பூஜை..!

புரட்டாசி மாதமே சிறப்பானது என்றாலும், இதில் வரும் அனைத்து சனிக்கிழமைகள் மிக அற்புதமானவை. புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து, பெருமாளை வழிபட முடியாவிட்டாலும், புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும்.

இதனால் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும். அதோடு புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து, பெருமாளை பக்தியுடன் வழிபடுபவர்களுக்கு சனியினால் ஏற்படும் தோஷங்கள் மட்டுமின்றி, எப்படிப்பட்ட கிரக தோஷங்கள் இருந்தாலும் அது நீங்கி விடும்.

புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில், தினமும் பெருமாளை வழிபடுவது உன்னதமானது. வழிபாட்டுக்கு உரியது புரட்டாசி மாதம். வேண்டுதலுக்கு உரிய மாதம் இது. வேண்டுதலையும் நேர்த்திக்கடனையும் செலுத்துகிற மாதமும் இதுவே.

புரட்டாசி மாதத்தில் குலதெய்வத்தை அவசியம் வழிபடுவார்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் பார்த்துவிட்டு, விரதம் மேற்கொள்வார்கள். பின்னர் மாலையில் பெருமாளை மீண்டும் தரிசித்துவிட்டு, விரதத்தை நிறைவு செய்வார்கள்.

புரட்டாசி மாதத்தில், வெங்காயம், பூண்டு தவிர்ப்பார்கள் பலரும். அதேபோல் அசைவம் சேர்க்கமாட்டார்கள். ஏனென்றால், வழிபாட்டுக்கும் விரதத்துக்கும் உரிய புரட்டாசி மாதத்தில், வேங்கடவனை தரிசிப்பதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் மகத்தான பலன்களையெல்லாம் வழங்கக் கூடியவை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

புரட்டாசி சனிக்கிழமையில், பெருமாளை ஆலயம் சென்று தரிசிக்கும் போது, அங்கே நம்மால் முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவதும், அன்னதானம் செய்வதும் மும்மடங்குப் பலனதைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு

பொதுவாகவே புரட்டாசி மாதம் பலரும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு விரதம் இருப்பார்கள். அதோடு மட்டுமல்லாமல் சனிக்கிழமை தோறும் ஒரு பொழுது விரதம் இருப்பார்கள். மேலும் அருகில் இருக்கக்கூடிய பெருமாளின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதும் பலரது வழக்கமாகவே இருக்கும். இன்னும் சிலர் இந்த புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் நடக்கக்கூடிய பிரம்மோற்சவத்தில் கலந்துகொண்டு திருப்பதி பெருமாளை வழிபாடு செய்யும் வழக்கமும் வைத்திருப்பார்கள். இப்படி ஆலயத்திற்கு சென்று வழிபடுபவர்களாக இருந்தாலும் சரி, வீட்டிலேயே வழிபடுபவர்களாக இருந்தாலும் சரி பெருமாளின் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் நாம் வழிபாடு செய்வோம். அப்படி பெருமாளின் அருள் கிடைப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறை.

சனிக்கிழமை அன்று காலையில் வீட்டில் இருக்கக்கூடிய பெருமாள் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். சந்தனம் வைக்கும் பொழுது அதில் பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள் தூள் இவை இரண்டையும் கலந்து வைக்க வேண்டும். அடுத்ததாக பெருமாளுக்கு துளசி மாலை சாற்ற வேண்டும். மேலும் மஞ்சள் நிறத்திலான மலர்களால் ஆன மாலையையும் சாற்றி வேண்டும். பெருமாளுக்கு பிடித்தமான சர்க்கரைப் பொங்கலை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். முக்கியமாக துளசி தீர்த்தம் வைக்க வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று துளசி மாலை வாங்கி கொடுத்து வழிபாடு செய்வது என்பது சிறப்பு. வீட்டிலேயே வழிபாடு செய்பவர்கள் அன்றைய தினம் பச்சரிசி மாவில் சிறிது நெய் ஊற்றி வெல்லம் சேர்த்து மாவிளக்காக தயார் செய்ய வேண்டும். ஏழு எண்ணிக்கையில் மாவிளக்கை தயார் செய்து அதில் நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தில் சிறிதளவு பச்சை கற்பூரத்தையும் சேர்க்க வேண்டும். இப்படி ஏழு மாவிளக்கு தீபம் ஏற்றி வைத்து பெருமாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த தீபத்தை ஏற்றி வைத்த பிறகு பெருமாளுக்கு உரிய நாமங்களையும், விஷ்ணு சகஸ்ர நாமங்களையும் கூறி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். அவரை வணங்குவதோடு சேர்த்து மகாலட்சுமி தாயாரின் ஸ்லோகங்களையும் நாம் கூறி வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணு இருவரும் நம் வீட்டிற்கு எழுந்தருளி அனைத்து விதமான செல்வங்களை வாரி வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த மாவிளக்கு தானாக குளிர வேண்டும். மறுநாள் இந்த மாவிளக்கை எடுத்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிரசாதமாக தரலாம் அல்லது பசு மாட்டிற்கு தானமாக தந்து விடலாம்.

மகாவிஷ்ணுவின் அருளை பரிபூரணமாக பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தீபத்தை வீட்டில் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் போதும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மறவாமல் கோயில் சென்று பெருமாளுக்கு துளசி மாலை செலுத்தினால் நல்லது.

விரதம் இருக்கும் முறை

புரட்டாசி மாத விரதம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. காலையில் இருந்து விரதத்தை தொடங்குபவர்கள் மாலை பெருமாளை தரிசித்துவிட்டு விரத்தை நிறைவு செய்வார்கள். இந்த மாதத்தில் உணவில் எந்தெந்த பொருட்களை தவிர்த்துவிட்டு சமைத்தால் நல்லது என பார்க்கலாம்.

1. வெங்காயம், பூண்டு, கரம் மசாலா பொருட்கள், இஞ்சி ஆகிவற்றை உணவில் தவிர்ப்பது நல்லது பலனும் கிட்டும்.

2. புரட்டாசி முழுவதும் அசைவம் சாப்பிடமாட்டார்கள் இது பொதுவாக இருக்கும் பழக்கம் தான். இந்த மாதத்தில் வேங்கடவனை தரிசிப்பதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யும் பழக்கமும் எல்லாம் பலனையும் கொடுக்கும்.

விளம்பரம்

3. இந்த நன்னாளில் பெருமாளுக்கு புளியோதரை அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து மனதார வழிபடுங்கள்.

4. அன்னத்தானம் செய்தாலும் புண்ணியம் தரும். கடன் துன்பத்தில் இருந்து காத்தருளும் வேங்கடவன், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்கும் மகாலக்ஷ்மிதேவி இருவரையு மனதார வழிபடுங்கள் உங்கள் குறைகள் தீரும்.

5. குறிப்பாக புரட்டாசி முதன் சனிக்கிழமையில் கல்யாணம் ஆகாத பெண்கள் விரதம் இருந்தால் தடைப்பட்ட திருமணம் முதலான காரியங்களை பெருமாளும் தாயாரும் நடத்துவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

முதல் சனிக்கிழமையில் செய்ய வேண்டிய பூஜை

சனிக்கிழமையில் பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் கலந்த மாவிளக்கு ஏற்றி பெருமாளை வழிபடவேண்டும். திருப்பதியில் உள்ள ஏழுமலைகளை குறிக்கும் மாவிளக்கை கட்டாயம் ஏற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் வைப்பது மிகவும் நல்லது. இதன்மூலம் ஜாதகங்களில் இருக்கும் தோஷங்கள் நிவர்த்தியாகும். இத்துடன் பெருமாளுக்கு படையல் போட்டு குத்து விளக்கில் 5 முகம் ஏற்றி வழிபடுவது மிக மிக நல்லது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் கட்டாயம் இவற்றை கடைபிடிங்கள்:

1. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது வழக்கம்.

2. இந்த புரட்டாசி மாதத்தில் பிட்சை எடுத்து பெருமாளுக்கு தளிகை போடுவது வழக்கம். அப்படி பிட்சை எடுக்கும் போதும் போடும் போதும் இருவருமே கவனமாக இருத்தல் நல்லது. பெருமாளின் அருள் இருவருக்குமே கிடைக்கும்.

3. தளியலுக்கு தேவையான சர்க்கரை பொங்கல், எள்ளு பாயசம், புளி சாதம், தயிர் சாதம், தளியல் வடை, கொண்டை கடலை சுண்டலுடன் வாழைக்காய் பொரியல் ஆகிய நைவேத்யங்கள் தயார் செய்ய வேண்டும்.

4. ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் துளசியை கலந்து படையல் முன்பு வைக்கவும். தேங்காய், வாழைப்பழம், பூ, வெற்றிலை, பாக்கு, சூடம் விபூதி குங்குமம் இவைகளை தட்டில் வைத்து தூப தீப ஆராதனை செய்து கோவிந்தா என்ற நாமத்துடன் புரட்டாசி சனிக்கிழமை அன்று வெங்கடேச பெருமாளை வழிபடுவது சிறப்பு.
Previous Post Next Post