இனி குழந்தைகள் செல்போன், டிவி பார்க்கக்கூடாது. பெற்றோர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு. அரசு அதிரடி.!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மிகவும் அதிகரித்து விட்டது. குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருமே செல்போனை பயன்படுத்துகிறார்கள்.

குறிப்பாக குழந்தைகள் முதற்கொண்டு செல்போன் பார்ப்பதால் அவர்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்படைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சுவீடன் நாட்டு அரசு ஒரு முக்கிய உத்தரவினை போட்டுள்ளது. அதாவது 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இனி செல்போன் மற்றும் டிவி பார்க்கக்கூடாது என அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அதன் பிறகு 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் மட்டுமே டிவி அல்லது செல்போன் பார்த்துக் கொள்ளலாம். இதனையடுத்து 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரத்திற்கு செல்போன் அல்லது டிவி பார்த்துக் கொள்ளலாம். 

இதைத்தொடர்ந்து 13 முதல் 18 வயது உடையவர்கள் ‌ ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே செல்போன் அல்லது டிவி பார்க்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள் தூங்க செல்வதற்கு முன்பாக கட்டாயமாக செல்போன் மற்றும் டிவி பார்க்கக்கூடாது எனவும் அவர்கள் தாங்கள் பயன்படுத்தும் செல்போன், லேப்லெட்டுகள் போன்றவற்றை பெட்ரூமுக்கு வெளியிலேயே வைத்து செல்ல வேண்டும் எனவும் அந்நாட்டின் ‌ பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Previous Post Next Post