நம் நாட்டில் வசிக்கும் சாமானியருக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்களை வழங்குவதற்கு ரேஷன் கார்டுகள் பயன்படுகின்றன.
நாம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் கார்டுகளின் மூலம் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அரசாங்க ஆவணங்களை எப்படி டிஜிட்டல் முறையில் டவுன்லோட் செய்ய முடியுமோ அதேபோல இந்த ஸ்மார்ட் கார்டுகளையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இந்தப் பதிவில் தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் எப்படி ஸ்மார்ட் கார்டை டவுன்லோட் செய்வது என்பதைப் பாரப்போம்.ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் என்றால் என்ன?: ஸ்மார்ட் ரேஷன் கார்டு என்பது நியாய விலைக் கடைகளில் மானிய விலையில் பொருட்களை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு அரசாங்க ஆவணம். ஸ்மார்ட் ரேஷன் கார்டு என்பது ரேஷன் கார்டின் டிஜிட்டல் பதிப்பாகும்.தமிழ்நாட்டில் வழங்கப்படும் ஸ்மார்ட் ரேஷன் கார்டின் வகைகள்: வெளிர் பச்சை நிற ஸ்மார்ட் கார்டு, வெள்ளை நிற ஸ்மார்ட் கார்டு, காக்கி நிற ஸ்மார்ட் கார்டு, கமாடிட்டி கார்டு என 4 ஸ்மார்ட் கார்டு வகைகள் உள்ளன. காக்கி நிற ஸ்மார்ட் கார்டு காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ரேஷன் கார்டு.ஆன்லைனில் ஸ்மார்ட் கார்டை டவுன்லோட் செய்வது எப்படி?:
ஸ்டெப்1: முதலில் அதிகாரப்பூர்வ TNPDS இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் : 2: அதன் பின் "Beneficiary" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் :3: உங்கள் ஸ்மார்ட் கார்டோடு பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை என்டர் செய்து "Request an OTP" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: தற்போது "Smart Card Print" என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: பின்னர் "Save" என்பதைக் கிளிக் செய்து ஸ்மார்ட் கார்டை உங்கள் மொபைலில் PDF ஆகச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்,
இதன் மூலம் தேவைப்படும்போது கடைக்காரர்களுக்குக் காட்டலாம்.இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கானது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்ப இந்தப் போர்ட்டல் மாறுபடும். ஸ்மார்ட் கார்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்னும் பட்சத்தில் மேலே கூறப்பட்டுள்ள ஸ்டெப்ஸ்களைப் பயன்படுத்தி எளிய முறையில் டவுன்லோட் செய்யலாம்.
Tags:
பொதுச் செய்திகள்