பாடாய் படுத்தும் கொழுப்பு கல்லீரலை பதமாய் சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்


இன்றைய காலகட்டத்தில் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை மிகவும் பொதுவான ஒரு பிரச்சனை ஆகிவிட்டது.

இது ஃபாட்டி லிவெர் மற்றும் லிவர் ஸ்டீடோசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை ஆகியவை இந்த பிரச்சனைக்கு முதன்மை காரணங்களாக இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி கொழுப்பு கல்லீரல் நோயாளிகள் கண்டறியப்படும் நிலை உள்ளது. வழக்கமாக, டைப் 2 நீரிழிவு நோயாளிகள், உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள், அதிகப்படியாக மது அருந்துபவர்கள் ஆகியோருக்கு அதிகமாக கொழுப்பு கல்லீரல் பிரச்சனை ஏற்படுகின்றது.

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால், அதை புறக்கணிக்கக் கூடாது. சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்து மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமாகும். அதனுடன் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருப்பவர்களுக்கு உடல் சில அறிகுறிகளை அளிக்கும். இந்த அறிகுறிகள் குறித்த புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். அதன் அறிகுறிகளை கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவது அவசியம். சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலமாகவும் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை சரி செய்யலாம். கொழுப்பு கல்லீரல் பிரச்சனையின் அறிகுறிகள் மற்றும் இதிலிருந்து நிவாரணம் அளிக்கும் சில வீட்டு வைத்தியங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கொழுப்பு கல்லீரலின் அறிகுறிகள்

- அடிக்கடி வாந்தி வரும் நிலை
- பசியின்மை
- முடி உதிர்தல்
- ஞாபக மறதி
- தோலில் அரிப்பு
- எடை இழப்பு
- சிறுநீரின் நிறத்தில் மாற்றம்
- அதிக சோர்வு
- தசைப்பிடிப்பு
- தொடர் காய்ச்சல்

கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கான வீட்டு வைத்தியங்கள்

எலுமிச்சை தண்ணீர்

எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். எலுமிச்சை தண்ணீர் உடல் பருமனை குறைக்கவும் தவுகின்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான நீரை ஒரு கிளாஸ் குடிப்பது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. கல்லீரல் பிரச்சனைக்கு நிவாரணம் அளிப்பதோடு, எலுமிச்சை நீர் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது.

வெந்தயம்

வெந்தய தண்ணீரை குடிப்பது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இது கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை மட்டும் சரி செய்யாமல் தைராய்டு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் நிவாரணம் அளிக்கின்றது. கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற, வெந்தய நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதை செய்ய, வெந்தயத்தை இரவில் ஒரு கிளாஸில் போட்டு ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதன் மூலம் சில நாட்களில் நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சி

இஞ்சியை பல வித உணவுகளில் சேர்க்கலாம். இதன் மூலம் முதன்மையாக செரிமான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். தினமும் ஒரு கப் இஞ்சி டீ அல்லது இஞ்சி தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் உள்ளன. இது செரிமானத்தை சீராக்கி, உடல் பருமனைக் குறைக்கிறது.

பூண்டு

பூண்டில்பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் உள்ள பண்புகள் காரணமாக, பூண்டு பெரும்பாலான பிரச்சனைகளுக்கு ஒரு சஞ்சீவியாக பயன்படுத்தப்படுகின்றது. கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறவும் இது உதவியாக உள்ளது. தினமும் ஒன்று முதல் இரண்டு பற்கள் பூண்டு சாப்பிடுவது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மஞ்சள் பால்

மஞ்சளில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இது கல்லீரலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும். தினமும் தூங்கும் முன் மஞ்சளை ஒரு டம்ளர் பாலில் கலந்து குடிக்கலாம். இதனால் கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் உதவி கிடைப்பதோடு உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
Previous Post Next Post