நகங்கள் காட்டி கொடுத்து விடும்… பொதுவாக நமது உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அது எப்படியாவது நமக்கு ஒருசில அறிகுறிகளின் மூலம் வெளிக்காட்டும்.
அந்த வகையில் நமது உடலில் இருக்கும் பிரச்சனைகளை நமது கைவிரல் நகங்களின் மூலமே அறிந்து கொள்ளலாம். அது எப்படி என்று நீங்கள் கேட்கலாம்? பொதுவாக விரல் நகங்களின் அடிப்பகுதி சற்று வெளிறிய நிறத்தில் இருப்பதைக் காண்பீர்கள். உங்கள் விரல் நகங்களின் அடிப்பகுதியில் பிறைப்போன்று காணப்படுகிறதா? அப்படி விரல் நகத்தில் தெரியும் பிறை உடலில் உள்ள பிரச்சனைகளைத் தான் சுட்டிக் காட்டுகிறது என்பது தெரியுமா?
நகங்களில் உள்ள பிறையின் நிறம், வடிவம் அல்லது அளவு நோயின் இருப்பை சுட்டிக் காட்டுவதால், இதுக்குறித்து விரிவாக தெரிந்து கொண்டால், ஆரம்பத்திலேயே உடலில் உள்ள பிரச்சனையை கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள வசதியாக இருக்கும் மற்றும் விரைவில் சரிசெய்யவும் முடியும்.
சிறிய விரல் சிறுநீரகங்கள், சிறுகுடல் மற்றும் இதய செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிலும் சிறிய விரலில் பிறையானது மிகவும் பெரிதாக தெரிந்தால், அது உயர் இரத்த அழுத்தத்தின் விளைவாகவும் இருக்கலாம்.
மோதிர விரல் இனப்பெருக்கம் மற்றும் நிணநீர் அமைப்புகளின் செயல்பாட்டுடன் தொடர்புடையது. ஒருவரது மோதிர விரலில் பிறையானது நன்கு வெளிப்படாமல் லேசாக தென்பட்டால், அது செரிமான பிரச்சனைகளைக் குறிக்கிறது.
நடு விரல் மூளை மற்றும் இதய அமைப்பின் செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. நடு விரலில் பிறை இல்லாவிட்டால், அது வாஸ்குலர் பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறிக்கிறது.
ஆள்காட்டி விரல் பெருங்குடல், கணையத்துடன் தொடர்புடையது. எனவே பெருங்குடல், கணையத்தின் முறையற்ற செயல்பாடு அல்லது நாள்பட்ட ENT நோய்கள் இருந்தால், ஆள்காட்டி விரலில் உள்ள பிறை தென்படாது அல்லது மிகவும் சிறியதாக தென்படும்.
பெருவிரல் அல்லது கட்டைவிரல் நுரையீரல் மற்றும் மண்ணீரலின் வேலையைப் பிரதிபலிக்கிறது. கைவிரல் நகங்களிலேயே நன்கு புலப்படும் மற்றும் முழு விரல் நகத்திலும் 25%-த்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது. ஆனால் புகைப்பிடிப்பவர்களுக்கு இது மிகவும் சிறியதாகவோ அல்லது தமனி உயர் இரத்த அழுத்தம் இருக்கும் போது பிறை பெரியதாகவோ இருக்கலாம்.
விரல் நகத்தின் மூன்றில் ஒரு பகுதியை பிறை ஆக்கிரமிக்கும் போது, அது பெரியதாக கருதப்படுகிறது. அதோ இவை இதய அமைப்பு, இதயத் துடிப்பு சீர்குலைவு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் போன்றவற்றை குறிக்கிறது. பெரிய அளவிலான பிறை பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் உடல் செயல்பாடுகளுடன் தொடர்புடையவர்களிடம் காணப்படும்.
ஒருவர் விளையாட்டுக்களில் ஈடுபடாமல், விரல் நகங்களில் பிறை பெரியதாக இருந்தால், அது அதிகளவு மன அழுத்தத்தைக் குறிக்கிறது.
Tags:
உடல் நலம்