வெளியில் போகாமல் வீட்டிற்குள்ளேயே வாக்கிங் செய்வது எப்படி?


உடல் எடையை குறைக்க, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலர், பல்வேறு உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர்.

இதில், முக்கிய உடற்பயிற்சியாக கருதப்படுவது, வாக்கிங் உடற்பயிற்சிதான். பலர், காலையில் வேலைக்கு செல்லும் முன்னர் சீக்கிரமாக எழுந்து வாக்கிங் செல்ல வேண்டும் என்று நினைப்பர். ஆனால், அதற்கு நேரமில்லாமல் இருங்கள். தினசரி 10,000 ஸ்டெப்ஸ் நடந்தால், உடலுக்கு நல்லது என்பதும் மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. வெளியில் செல்லாமல், வீட்டிற்குள் இருந்தவாறு கூட நம்மால் இந்த 10,000 நடைகளை முடிக்க முடியுமாம். அது எப்படி தெரியுமா?

வீட்டிற்குள்ளேயே நடைப்பயிற்சி:

வெளியில் சென்று வாக்கிங் செய்யும் அளவிற்கான ரிசல்டை, வீட்டிற்குள்ளேயே செய்யும் நடைப்பயிற்சி தரவில்லை என்றாலும், இது சிறந்த மாற்றாக பார்க்கப்படுகிறது. இதை செய்வதன் மூலம் ஒட்டுமொத்த உடல் பாகங்களையும் ஃபிட் ஆக வைத்துக்கொள்வதோடு, எடையை குறைக்கவும் உதவுகிறது.

ட்ரெட்மில் வாக்கிங்:

வீட்டில் அல்லது ஜிம்மில் ட்ரெட்மில் இருந்தால் அதில் வாக்கிங் செல்வது, நீங்கள் வெளியில் செல்லும் வாக்கிங் அளவிற்கு பயனை கொடுக்கும். இதில், நமக்கு ஏற்ற கி.மீ வேகத்தை செட் செய்து, அதில் எத்தனை நிமிடங்கள் வேண்டுமானாலும் நடக்கலாம். இதில், இன்க்லைன் வாக்கிங் என்ற ஒரு ஆப்ஷனும் இருக்கிறது. இது, சமமாக இருக்கும் தரையை மலை மேல் ஏறுவது போல, மேடாக மாற்றும். இதில் நடந்தாலும், உடல் எடை வேகமாக குறையும் என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, நாம் எவ்வளவு தூரம் நடந்திருக்கிறாேம்? அதற்கு எவ்வளவு கலோரிகள் எரிக்கப்பட்டிருக்கின்றன? என்பதையும் ட்ரெட்மில் காண்பிக்கும்.

நடைப்பயிற்சி-உடற்பயிற்சி:

இதனைஆங்கிலத்தில்"Walking Circuits" என்று கூறுகின்றனர். இதில், முதலில் சில நிமிடங்கள் வாக்கிங் செய்ய வேண்டும். பின்னர், ஸ்குவாட், புஷ் அப் போன்ற உடற்பயிற்சிகளை செய்வர். பின்னர் மீண்டும் நடைப்பயிற்சிகளை ஆரம்பிப்பர். இது, கார்டியோ உடற்பயிற்சியாகவும் ஸ்ட்ரெந்த் ட்ரெயினிங் உடற்பயிற்சியாகவும் அமையும். ஒரு சிலர், மொட்டை மாடியில் 8 வடிவில் நடைப்பயிற்சி செய்வர். இதுவும், ஒரு வகையில் வாக்கிங் சர்க்யூட்தான்.

பேசிக்கொண்டே நடப்பது:

வீட்டிற்குள் அல்லது அலுவலகத்தில், நாம் அமைதியாக அமராமல் பேசும் போதும் வேலை பார்க்கும் போதும் நடந்து கொண்டே இருக்கலாம். வீட்டில் ஏதேனும் ஒரு அறையை தேர்ந்தெடுத்து அல்லது ஒரு ஏரியாவை தேர்ந்தெடுத்து அதில் தொடர்ந்து மாறி மாறி முன்னும் பின்னும் நடந்து கொண்டே இருக்கலாம்.

ஃபிட்னஸ் செயலிகள்:

நாம் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு தூரம் நடந்திருக்கிறோம், என்னென்ன உடற்பயிற்சிகளை செய்கிறோம் கணக்கிட பல ஃபிட்னஸ் செயலிகள் இணையதளங்களில் இருக்கின்றன. இவற்றை பதிவிறக்கம் செய்து நீங்கள் நடப்பதை டிராக் செய்யலாம். இதனால், நீங்கள் ஒரு நாளில் எத்தனை ஸ்டெப்ஸ் நடக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

விளையாட்டுகள்:

உங்கள் பார்ட்னர், குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் ஸ்டெப்-அப் சேலஞ்ச் வைத்துக்கொள்ளலாம். ஒரு வாரத்தில் யார் அதிகமாக நடப்பது? யார் அதிகமாக கலோரிகளை குறைப்பது? போன்ற சவால்களை வைத்து இந்த பயிற்சிகளை செய்யலாம். இது, உங்களது உடற்பயிற்சிகளை செய்ய வைப்பதுடன் உங்கள் மனநிலையையும் ஜாலியாக வைத்துக்கொள்ளும்.

உடல் எடையை குறைக்க, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலர், பல்வேறு உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர். இதில், முக்கிய உடற்பயிற்சியாக கருதப்படுவது, வாக்கிங் உடற்பயிற்சிதான். பலர், காலையில் வேலைக்கு செல்லும் முன்னர் சீக்கிரமாக எழுந்து வாக்கிங் செல்ல வேண்டும் என்று நினைப்பர். ஆனால், அதற்கு நேரமில்லாமல் இருங்கள். தினசரி 10,000 ஸ்டெப்ஸ் நடந்தால், உடலுக்கு நல்லது என்பதும் மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. வெளியில் செல்லாமல், வீட்டிற்குள் இருந்தவாறு கூட நம்மால் இந்த 10,000 நடைகளை முடிக்க முடியுமாம். அது எப்படி தெரியுமா?
Previous Post Next Post