சுகரை குறைக்கும் முளைகட்டிய பச்சைப்பயறு தோசை..


பச்சை பயிறு ஆரோக்கியமான காலை உணவாகும்.. இதனை இரவிலும் செய்து சாப்பிடலாம்.. இது முழுக்க முழுக்க உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமே தரக்கூடியது..


இதனை செய்து சாப்பிடுவதினால் உடல் எடை குறைவதுடன் உடலில் உள்ள சுகரின் அளவும் சரியாக பராமரிக்கப்படுகிறது..வாங்க இந்த பச்சை பயிறு தோசையை எப்படி வீட்டில் செய்வது? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

உடல் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்ள சத்தான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.. அதில் மிக முக்கியமான ஒன்று முளைக்கட்டிய பயிறு வகைகள்.. இதனை அப்படியே சாப்பிட பிடிக்கவில்லை என்றால் தோசையாக செய்து சாப்பிடலாம்.. இது குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கும் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் ஆரோக்கியமனது..

தேவையான பொருட்கள்

பச்சை பச்சை பயறு - ஒரு கப்

அரிசி -2 டேபிள்ஸ்பூன்

தண்ணீர் - 3 கப்

சீரகம் - ஒரு டீஸ்பூன்

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 2

பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்

கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. பச்சை பயறை நன்றாக கழுவி 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.. பின்னர் வெங்காயம், தக்காளி, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்..

2. ஊறவைத்த பச்சை பயறை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தோல் நீக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

3. அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சீரகத் தூள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

4. இப்போது தோசை கல்லை அடுப்பில் வைக்க வேண்டும்.. அது சூடானதும் மாவை சற்று தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வேகவிடவும். வேக விட்டபிறகு அதை எடுத்து தட்டில் வைத்து சுவையான கார சட்னி உடன் பரிமாறலாம்.. செம்ம டேஸ்டாக இருக்கும். கண்டிப்பா இந்த ரெசிபியை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.

முளைகட்டிய பச்சை பயறின் நன்மைகள்

1. முளைக்கட்டிய இந்த பச்சை பயறில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. ஆரோக்கியத்தை தரக்கூடிய இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. கேன்சரை தடுக்க கூடியது. உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியது..

2. இதில் வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது. அரிசியோடு பச்சை பயறு சேர்த்து பொங்கலாக சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும். உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்
Previous Post Next Post