காமதேனு சிலையை உங்க வீட்டின் இந்த இடத்தில் வையுங்கள்.. செல்வ வளம் பெருகும்..!




இந்துக்களின் சாஸ்திரப்படி பசுக்கள் மிகவும் புனிதமானவையாக கருதப்படுகின்றன. ஆனால் பசுக்களில் புனிதமானது காமதேனு ஆகும் ..


அதாவது, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை அமிர்தத்திற்காக கடையும்போது காமதேனு பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பசு நம் மனதில் உள்ள எந்த ஆசையையும் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை..

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த காம்தேனுவின் சிலையை நாம் வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.. அப்படி காமதேனுவின் சிலையை வீட்டில் வைத்திருப்பது வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும் என்ரும் இது நம் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும் செல்வத்தையும் கொடுக்கும் என்றும் வாஸ்து கூறுகிறது..வாங்க இந்த பதிவில் காமதேனு சிலையை வீட்டில் வைப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? வீட்டில் எந்தெந்த இடங்களில் இந்த சிலையை வைக்க வேண்டும்? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்..

காமதேனு என்றால் என்ன?

காமதேனு பசு சுரபி என்றும் அழைக்கப்படுகிறது.. இது அனைத்து பசுக்களின் தாயாகவும், செல்வம் மற்றும் செழுமையின் முன்னோடியாகவும் போற்றப்படும் தெய்வீகப் பசு உருவமாக குறிப்பிடப்படுகிறது.. பக்தர்களால் அன்புடன் வழிபடப்படும் காமதேனு எந்த விருப்பத்தையும் நிறைவேற்றும் எனவும், தனது பக்தர்களுக்கு பொருள் மற்றும் ஆன்மிக ஆசீர்வாதங்களை வழங்கக்கூடிய மாய சக்திகளைக் கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.

காமதேனு பசுவை வீட்டில் வைப்பதற்கான வாஸ்து திசைகள் என்ன?

1. பசு சிலையை வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைத்தால் செல்வம் பெருகும், கடன்கள் குறையும். தொழில்கள் மற்றும் முதலீடுகள் வெற்றி பெறுவதற்கு சாதகமான சூழல் உருவாக்கும்..

2. காமதேனு ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. அதன் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைப்பதால் உடல்நலக் குறைபாடுகள் மற்றும் மன அழுத்தம் குறைகிறது.

3. காமதேனுவின் தலை வீட்டிற்குள் நோக்கியவாறு வக்க வேண்டும்.. வீட்டில் வடக்கு திசையில் காமதேனு படத்தை மாட்டுங்கள். அல்லது வட கிழக்கு திசையிலும் மாட்டிக் கொள்ளலாம். இப்படி வைத்தால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும்.

4. குருவின் ஆதிக்கம் பெற்றது வடக்கு பகுதி. அங்கு நாம் காமதேனு படம் வைக்கும் போது அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்..

5. வட கிழக்கு திசையில் காமதேனு படம் மாட்டுவதால் பண வரவு, தெளிவான சிந்தனை, எண்ண ஓட்டம் கிடைக்கும்.

6. ஆனால் ஒரு போதும் தென் மேற்கு திசையில் காமதேனு படத்தை வைக்காதீர்கள். அப்படி செய்தால் வீட்டிற்கு வரவு குறைந்து செலவு அதிகமாகும்.

தென் கிழக்கில் மாட்டினால் ஆரோக்கிய சீர்கேடு, வம்பு வழக்கு, கணவன் மனைவி உறவில் பிரச்னை ஏற்படும்.

7. மிக முக்கியமாக காமதேனு படத்தை யாருக்கும் பரிசளிக்காதீர்கள். அப்படி செய்தால் உங்கள் செல்வம் குறையும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது..
Previous Post Next Post