ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன. பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு விநாயக சதுர்த்தி விழா இன்று (செப். 9) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது வழக்கம். அதே போல் நாட்டில் பல இடங்களில் பெரிய விநயகார் சிலைகளை வைத்து வழிபடுவதும், தொடர்ந்து அந்த சுவாமி சிலையை நீர் நிலைகள், ஆறு, கடலில் கரைக்கப்படுவது பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.
விநாயகர் சதுர்த்தி பூஜை நல்ல நேரம்:
2024 விநாயகர் சதுர்த்தி தொடங்கும் நாள் : 7 செப்டம்பர் (சனிக்கிழமை)
2024 விநாயகர் சதுர்த்தி பூஜை திதி ஆரம்பம் : 6 செப்டம்பர் (வெள்ளிக்கிழமை) மாலை 3:01 மணிக்கு
2024 விநாயகர் சதுர்த்தி பூஜை முகூர்த்தம் : 7 செப்டம்பர் காலை 11 மணி முதல் மதியம் 1:34 வரை
2024 விநாயகர் சதுர்த்தி பூஜை திதி முடிவு : 7 செப்டம்பர் மாலை 5.37 மணிக்கு
2024 விநாயகர் சதுர்த்தி முடியும் நாள் : 17 செப்டம்பர் (செவ்வாய்க்கிழமை)
சதுர்த்தி திதி எப்போது நீடிக்கும்:
சதுர்த்தி திதி 6 செப்டம்பர் 2024 அன்று மாலை 03:01 மணி முதல் 7 செப்டம்பர் 2024 அன்று மாலை 05:37 மணி வரை நீடிக்கும்.
சதுர்த்தி அன்று விநாயகருக்கு படைக்கும் உணவு:
விநாயகர் சதுர்த்தி அன்று அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். மேலும், அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ ஆகியவை படைக்கப்பட வேண்டும்.
Tags:
நம்பிக்கை