ஆதார் அட்டையை எப்படி இலவசமாகப் புதுப்பிக்கலாம்?

ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருந்தாலோ அல்லது ஆதார் கார்டு எடுத்ததிலிருந்து இதுவரைக்கும் எந்த ஒரு அப்டேட்டும் பண்ணாமல் இருந்தாலோ வரும் செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆதார் கார்டை ஒரு முறை அப்டேட் செய்ய வேண்டும்.

ஒருவேளை நீங்கள் இந்த அப்டேட்டை செய்யவில்லை என்றால் உங்களுடைய ஆதார் கார்டு தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் முடக்கப்படலாம்.

ஆதார் அட்டையை ஏன் அப்டேட் செய்ய வேண்டும்?

10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் கார்டு எடுக்கப்பட்டவர்களின் தற்போதைய நிலை என்ன என்பதையும், 10 ஆண்டுகளுக்கு முன் ஆதார் கார்டு எடுப்பதற்காக வழங்கப்பட்ட ஆவணமும் தற்போது வைத்திருக்கக்கூடிய ஐடி ப்ரூப், அட்ரஸ் ப்ரூப் ஒத்து போகிறதா இல்லையா, 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட ஆதார் பயோமெட்ரிக் உடன் தற்போது எடுக்கப்படும் பயோமெட்ரிக்கை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஆதார் அட்டையை அப்டேட் செய்ய வேண்டியது கட்டாயம்.

ஆதார் கார்டு அப்டேட் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?

பான்-ஆதார் அட்டையை லிங்க் செய்யும் போது சிக்கல் ஏற்படலாம். ரேஷன் கடையில் ரேஷன் பொருள்களை வாங்கும்போது பயோமெட்ரிக் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படலாம்.

ஆதார் அட்டையை அப்டேட் செய்ய தேவையான ஆவணங்கள் என்ன?

ஆதார் கார்டை அப்டேட் செய்ய இரண்டு டாக்குமெண்ட் அவசியம். ஒன்று ஐடி ப்ரூப், மற்றொன்று அட்ரஸ் ப்ரூப்.

ஆதார் கார்டு அப்டேட் எப்படி செய்வது?

முதலில் இந்த https://uidai.gov.in வெப்சைட் ஓபன் செய்யுங்கள்

மை ஆதார் அப்படிங்கிற லிங்கை கிளிக் செய்யவும்

உங்களுடைய ஆதார் நம்பர் நிரப்பிய பிறகு கேப்சாவை போடுங்கள்

ஆதார் அட்டையுடன் லிங்க் செய்யப்பட்ட மொபைலுக்கு ஓடிபி (OTP) வரும்.

அந்த ஓடிபி-ஐ என்டர் செய்யவும். புதிதாக ஒரு ஸ்கிரீன் திறக்கும்

அதில் உங்களுடைய ஆதார் அட்டை அப்டேட் குறித்த தகவல் இருக்கும்.
Previous Post Next Post