கல்லீரலை காலி செய்யும்... சில ஆபத்தான காலை பழக்கங்கள்


நம் உடலில் உள்ள உறுப்புகளில் அதிகம் வேலை செய்யும் உறுப்பு கல்லீரல் தான். நமது உடலில் சேர்ந்து இருக்கும் நச்சுக்களை நீக்கும் சுத்திகரிப்பு ஃபேக்ட்ரி போல் கல்லீரல் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடல் கிரகித்துக் கொள்ள உதவுவதும் கல்லீரலின் வேலை தான்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். ஆனால், இன்றைய மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லா நிலை போன்ற காரணங்களால் கல்லீரல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக, சில மோசமான காலை பழக்கங்கள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும், மேலும் கல்லீரல் சேதமடைந்தால், நீரிழிவு போன்ற கடுமையான நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். இது போன்ற சில தவறுகளை பற்றி தெரிந்து கொள்வோம், சரி செய்யாவிட்டால், கல்லீரலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

காலையில் தண்ணீர் குடிக்காமல் நாளை தொடங்குவது

காலையில் முதலில் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இது சிறந்த டீடாக்ஸ் பானம். தண்ணீர் குடிப்பது கல்லீரலில் உள்ள நச்சுத் தன்மைகளை அகற்றி உடலை டீடாக்ஸ் உதவுகிறது. தண்ணீர் குடிக்காமல் ஒரு நாளைத் தொடங்கும் போது, அது கல்லீரல் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் கல்லீரலுக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்தப் பழக்கத்தை கடைபிடிக்காமல், பலர் காலையில் எழுந்ததும், காபி அல்லது டீ அருந்தி நாளைத் தொடக்குகின்றனர்.

எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகாலையில் சாப்பிடுவது

பலர் வறுத்த அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளை காலை உணவாக தேர்ந்தெடுக்கிறார்கள். கொழுப்பு நிறைந்த உணவுகள் கல்லீரலில் கொழுப்பைக் குவிக்கின்றன. இது கொழுப்பு கல்லீரல் நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல் கல்லீரலையும் பாதிக்கிறது. இது கல்லீரலின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைக்கும் இந்த பழக்கத்தை நீண்ட காலமாக தொடருவது, கால்லிரலை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நீரிழிவு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.

மீதமுள்ள உணவை காலையில் சாப்பிடுவது

காலையில் மீதமுள்ள உணவை சாப்பிடுவது கல்லீரலை பாதிக்கும். இரவில் எஞ்சிய உணவை பலர் காலையில் சாப்பிடும் வழக்கம் உள்ளது. பழைய சாதம் உடலுக்கு நல்லது தான். அவற்றில் குடலுக்கு தேவையான நுண்ணுயிர்கள் உள்ளன. ஆனால், பிற பழைய உணவுகளை உண்ணும் பழக்கம் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். பழைய உணவு கல்லீரலில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் அவற்றில் மூலம் உடலில் சேரும் பாக்டீரியா மற்றும் நச்சுகளை அகற்ற கல்லீரல் கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். இது கல்லீரல் செயல்பாட்டை பலவீனப்படுத்தும்.

உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது

உடற்பயிற்சி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. காலையில் சிறிது உடற்பயிற்சி செய்வது ஒட்டு மொத்த உடலுக்கு மட்டுமின்றி கல்லீரலுக்கும் நன்மை பயக்கும். நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே பணியாற்றும் வேலையில் உள்ளவர்கள், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது அவர்களின் கல்லீரலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதன் காரணமாக, கல்லீரல் படிப்படியாக பலவீனமடையும் என்பதோடு, எதிர்காலத்தில் அது கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.

காலையில் எழுந்தவுடன் புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல்

புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் அருந்துதல் கல்லீரல் செல்களை சேதப்படுத்தும். கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும் இந்த பழக்கத்தை நிச்சயம் கைவிட வேண்டும். காலையில் எழுந்தவுடன் சிகரெட் புகைப்பது அல்லது மது அருந்துவது கல்லீரலுக்கு இரு மடங்கு தீங்கு விளைவிக்கும். இதனால், கல்லீரல் ஈரல் அழற்சி அல்லது புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
Previous Post Next Post