எந்நேரமும் உடம்பு சோர்வா இருக்கா? அப்ப உடம்புல இந்த குறைபாடு இருக்கு-ன்னு அர்த்தம்..



இன்று பெரும்பாலானோர் மிகுந்த உடல் சோர்வை சந்திக்கிறார்கள்.

இதற்கு தினமும் நீண்ட தூரம் பயணித்து வேலைக்கு சென்று விட்டு வருவது முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் இதனால் சந்திக்கும் உடல் சோர்விற்கு போதுமான ஒய்வை எடுத்தால், உடல் புத்துணர்ச்சி அடைந்துவிடும். அதுவே எந்த வேலையும் செய்யாமல், நல்ல போதுமான ஓய்வை எடுத்தும், ஒருவர் மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், அதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு தான்.

நமது உடல் சீராக செயல்பட வேண்டுமானால், உடலின் செயல்பாட்டிற்கு தேவையான சத்துக்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும். இந்த சத்துக்கள் உடலில் குறையும் போது, உடலின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, மிகுந்த உடல் சோர்வு, மந்த நிலை மற்றும் கவனம் செலுத்த முடியாமை போன்றவற்றை சந்திக்க நேரிடும். இப்போது உடலில் எந்த ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் மிகுந்த உடல் சோர்வை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.

இரும்புச்சத்து குறைபாடு

நமது உடலில் ஆக்ஸிஜனானது இரும்புச்சத்தின் மூலம் தான் உடல் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த இரும்புச்சத்து குறைவாக இருக்கும் போது இரத்த சிவப்பணுக்களால் தசைகள் மற்றும் திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை கொண்டு செல்ல முடியாது. இதன் விளைவாக மிகுந்த சோர்வாகவும், பலவீனமாகவும் உணரக்கூடும். பொதுவாக இந்த இரும்புச்சத்து குறைபாடு பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், அது மிகுந்த உடல் சோர்வு, தலைவலி, மூச்சுத்திணறல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

வைட்டமின் டி குறைபாடு

ஒருவரது ஆற்றல் ஒழுங்குமுறை மற்றும் மனநிலை சமநிலை ஆகியவற்றில் வைட்டமின் டி முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த வைட்டமின் டி போதுமான அளவு இல்லாத போது, ஒருவர் மிகுந்த சோம்பலாகவும், சோர்வாகவும் உணரக்கூடும். இந்த வைட்டமின் டி சூரிய ஒளியில் அதிகம் இருப்பதால், வீட்டிற்குள்ளேயே இருக்காமல் சிறிது நேரம் வெளியேயும் செல்லுங்கள். பொதுவாக இப்படியான வைட்டமின் டி குறைபாடு சூரிய ஒளி சருமத்தில் படாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பவர்களுக்கு தான் அதிகம் ஏற்படும்.

வைட்டமின் பி12 குறைபாடு

இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி மற்றும் நரம்பு செயல்பாடு ஆகியவற்றிற்கு வைட்டமின் பி12 மிகவும் இன்றியமையாதது. இந்த வைட்டமின் டி12 மிகவும் குறைவாக இருந்தால், அது ஒருவரது மனநிலையில் மாற்றங்கள், நினைவாற்றல் பிரச்சனைகள், மிகுந்த உடல் சோர்வு போன்றவற்றை உண்டாக்கு. பெரும்பாலும் இந்த வைட்டமின் குறைபாடு சைவ உணவாளர்களுக்கு அதிகம் ஏற்படும். ஏனெனில் வைட்டமின் பி12 இறைச்சிகளில் அதிகம் உள்ளன. எனவே இந்த குறைபாடு இருந்தால், அசைவ உணவுகள், பால் பொருட்கள் போன்றவற்றை உட்கொண்டு வந்தால் தடுக்கலாம்.

மக்னீசியம் குறைபாடு

மக்னீசியம் சத்தானது ஆற்றல் உற்பத்தி மற்றும் தசை செயல்பாடு போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது. இந்த மக்னீசியம் உடலில் குறைவாக இருந்தால், அது சோர்வு, எரிச்சலுணர்ச்சி, தசைப்பிடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் மக்னீசியம் குறைவாக இருந்தால், தூக்கத்தை பாதித்து, மிகுந்த உடல் சோர்வை ஏற்படுத்தும். இந்த மக்னீசியம் சத்தானது பாதாம், வெண்ணெய், கீரைகள் போன்றவற்றில் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் தடுக்கலாம்.

ஃபோலேட் குறைபாடு

வைட்டமின் பி9 தான் ஃபோலேட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஃபோலேட் டிஎன்ஏ உற்பத்தி, செல் வளர்ச்சி ஆகியவற்றிற்கு இன்றியமையாதது. பொதுவாக இந்த சத்து கர்ப்பிணிகளுக்கு மிகவும் முக்கியமானது. ஃபோலேட் குறைவாக இருந்தால், அது சோர்வு, எரிச்சலுணர்வு போன்றவற்றை உண்டாக்கும். இந்த ஃபோலேட் சத்து உடலில் போதுமான அளவில் இருக்க வேண்டுமானால், கீரைகள், பீன்ஸ், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை உண்பதன் மூலம் அதிகரிக்கலாம்.
Previous Post Next Post