சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்: 06-10-2024 அன்று புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 14-10-2024 அன்று சுக்கிரன் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17-10-2024 அன்று சூரியன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 23-10-2024 அன்று செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 25-10-2024 அன்று புதன் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: இந்த மாதம் ராசிநாதன் சூரியன் தனஸ்தானத்தில் இருக்கிறார். வீண்கவலை அகலும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளிவட்டார தொடர்புகளினால் நன்மைகள் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.
பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் இருந்த தடங்கல்கள் நீங்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம்.
கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். பெண்களுக்கு கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சுபச்செலவுகள் ஏற்படும்.
கலைத்துறையினருக்கு எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக நடக்கும். அரசியல்துறையினருக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
மகம்: இந்த மாதம் எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பண வரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.
பூரம்: இந்த மாதம் அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சரபேஸ்வரரை வணங்க காரிய தடை நீங்கும். மனஅமைதி கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: 16, 17 | அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10 | இந்தமாதம் கிரகங்களின் நிலை:
Tags:
ஜோதிடம்