சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற பெண் நர்சுகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற பெண் நர்சுகள் தேவைப்படுகின்றனர். விண்ணப்பதாரர்கள் பிஎஸ்சி நர்சிங் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வயது 35-க்குள் இருக்க வேண்டும்.
இதற்கான நேர்முகத் தேர்வு மும்பையில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வுசெய்யப்படுவோருக்கு ஊதியத்துடன் உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவையும் வழங்கப்படும். உரிய கல்வித்தகுதியும், பணி அனுபவமும் உடைய பெண் நர்சுகள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) பதிவுசெய்து தங்கள் சுயவிவர விண்ணப்பம், கல்வித்தகுதி சான்றிதழ், பாஸ்போர்ட், பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணிக்கு தேர்வுபெறுவோரிடமிருந்து சேவை கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும். ஊதியம் மற்றும் பணி விவரங்கள் தொடர்பான விவரங்களை 9566239685, 6379179200 ஆகிய செல்போன் எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு எந்தவொரு இடைத்தரகரோ, ஏஜென்டுகளோ கிடையாது. எனவே, விண்ணப்பதாரர்கள் நேரடியாக நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Tags:
வேலைவாய்ப்பு