குட்டையாக இருக்கும் உங்கள் குழந்தையின் உயரம் அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டியவை


நல்ல உயரமான உடல் வாகு சிறந்த ஆளுமையின் முக்கிய அங்கம். தனது குழந்தைகளின் உயரம் அதிகமாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருக்கும் உள்ள விருப்பமாக இருக்கும்.

சில பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் குட்டையாக இருக்கிறார்களே என்ற கவலை இருக்கலாம். உங்கள் குழந்தையின் உயரத்தை நிர்ணயிப்பதில் மரபணுக்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றாலும், சிறு வயதிலிருந்தே சரியான ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குவது, சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வது ஆகியவற்றின் மூலம் உங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிக்கலாம்.

பெற்றோர்களாகிய நாம் தான் குழந்தைகளுகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சிறந்ததைச் செய்ய வேண்டும். குட்டையான உங்கள் குழந்தையின் உயரத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

சமச்சீர் உணவு

அனைவருக்கும் சமச்சீரான, அனைத்து விதமான சத்துக்களும் நிறைந்த உணவு என்பது அடிப்படைத் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு சமச்சீர் உணவு (Health Tips) மிகவும் முக்கியமானது. உயரத்தை அதிகரிக்க, குழந்தைகளுக்கு புரதம், கால்சியம், வைட்டமின் டி மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு அனைத்து ஊட்டச்சத்தும் கிடைக்க அவரது டயட்டில் பல வகையான உணவுகளைச் சேர்க்க முயற்சிக்கவும். பழங்கள், முழு தானியங்கள், பால் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இனிப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்க்கவும். இவை வளர்ச்சியை பாதிக்கும்.

புரதம் நிறைந்த உணவுகள்: பருப்பு வகைகள், மீன், முட்டை, பால், சீஸ் போன்றவை.

கால்சியம் நிறைந்த உணவுகள்: பால், தயிர், பாலாடைக்கட்டி, பச்சை இலைக் காய்கறிகள் போன்றவை.

வைட்டமின் டி ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்: மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு போன்ற உணவுகள் மற்றும் சூரிய ஒளி.

உடற்பயிற்சி

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. குதித்தல், ஓடுதல், யோகா மற்றும் பிற உடல் செயல்பாடுகள் உயரத்தை அதிகரிக்க உதவும். குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க தொங்கும் வகையிலான பயிற்சிகள் எப்போதும் சிறந்த பலனை கொடுப்பதாக கருதப்படுகிறது. தொங்கும் போது முதுகெலும்பு நீள்கிறது, இது அவர்களின் உயரத்தை அதிகரிக்க உதவுகிறது.

போதுமான தூக்கம்

உங்கள் பிள்ளைகள் இரவில் சரியான நேரத்தில் உறங்கச் செல்வதையும், ஆழ்ண்ட்து உறங்குவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்ல ஆழ்ந்த தூக்கம் மிகவும் முக்கியம். தூக்கத்தின் போது உடல் வளர்ச்சி ஹார்மோனை உற்பத்தி செய்கிறது, இது உயரத்தை அதிகரிக்க உதவுகிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும். எனவே, குழந்தைகளுக்கு மன அழுத்தமில்லாத சூழலை உருவாக்குங்கள்.

உங்கள் குழந்தையின் உயரம் அவரது வயதுக்கு ஏற்ற வகையில் இல்லாமல் மிகக் குறைவாக இருப்பதாக நீங்கள் நினைத்தால், குழந்தை மருத்துவரை அணுகவும். உங்கள் குழந்தையின் உயரத்தை அதிகரிக்க அவர்கள் சில பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம்.

குறிப்பு: உயரத்தை அதிகரிக்க மந்திரங்கள் செய்யும் மருந்து எதுவும் இல்லை. சரிவிகித உணவு, முறையான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மன அழுத்தம் இல்லாத சூழல் ஆகியவை உயரத்தை அதிகரிக்க சிறந்த வழிகள்.
Previous Post Next Post