மூளை - நரம்பு ஆரோக்கியத்தை காக்கும் கோலின் சத்து... நிறைந்த சில உணவுகள்


கோலின் மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். இது சில தாவரங்கள் மற்றும் விலங்குகள் சார்ந்த உணவுகளில் அதிகம் உள்ளது.

கோலின் என்பது வளர்சிதை மாற்றம், நரம்பியல் ஆரோக்கியம், மூளை வளர்ச்சி மற்றும் பலவற்றை உள்ளடக்கிய இதர உடல் செயல்பாடுகளுக்கு தேவையான ஊட்டச்சத்து ஆகும். உங்கள் உடல் இயற்கையாகவே சிறிய அளவிலான கோலின் ஊட்டச்சத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டது என்றாலும், இந்த ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய இது மட்டும் போதாது, எனவே உங்கள் உணவில் கோலின் நிறைந்த உணவுகள் அவசியம் தேவை.

நமது உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் கொண்ட கோலின் சத்து வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு நாளைக்கு முறையே 550 mg மற்றும் 425 mg தேவைப்படுகிறது. கருவின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு கோலின் முக்கியமானது என்பதால், கர்ப்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த ஊட்டச்சத்தின் தேவை அதிகம் உள்ளது. 

எனவே, கர்ப்பிணிகளுக்கு ஒரு நாளைக்கு 450 மி.கி கோலின் தேவைப்படுகிறது, தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு 550 மி.கி. எனவே, உடலில் ஆனால் எந்த குறைபாடும் ஏற்படாமல் இருக்க கோலின் சத்து நிறைந்த பொருட்களை தவறாமல் சாப்பிட வேண்டும். உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் மூலம் கோலின் சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

நல்ல தூக்கத்திற்கு கொலின் சத்து அவசியம்

தூக்கம் என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கத்தின் போது, ​​உடல் தன்னைத் தானே சீர் செய்து கொள்கிறது, தூக்கமின்மை அல்லது ஆழ்ந்த தூக்கம் இல்லாத நிலை காரணமாக சோம்பல், சோர்வு, எரிச்சல், இதய நோய், மன அழுத்தம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

கோலின் நிறைந்துள்ள சில உணவுகள்

1. பப்பாளி

பப்பாளி பலருக்கும் பிடித்த பழமாகும். நல்ல செரிமானத்தை கொடுக்கும் உணவாக இருக்கும் இதனை வழக்கமாக சாப்பிட்டால், வயிறு ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. இந்தப் பழத்தை உண்பதன் மூலம் உடலுக்கு தேவையான கோலின் சத்து கிடைக்கும்.

2. முட்டை

முட்டைகள் புரத சத்து நிறைந்தவை என்பது அனைவரும் அறிந்ததே. அதே சமயத்தில், முட்டைகோலின் ஊச்சச்சத்தின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மஞ்சள் கருவை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கோலின் ஊட்டச்சத்து குறைபாடு என்பதே ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஒரு பெரிய முட்டையில் சுமார் 147 மி.கி கோலின் உள்ளது.

3. சிக்கன்

சிக்கன் என்னும் கோழி இறைச்சியில் புரதச் சத்து நிறந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இது உடலை வலிமையாக்குகிறது என்பதால், ஜின் டயட்டில் உள்ளவர்கள் இதனை வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர், 100 கிராம் வேகவைத்த கோழி இறைச்சியில் 73 மில்லிகிராம் கோலின் உள்ளது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். எனினும், இதனை அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளவும்.
Previous Post Next Post