காலையில் எழுந்ததும் ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றினால் நம்முடைய உடல்நலம் சிறப்பாக இருக்கும். எந்த மருந்தும் இல்லாமல் இயற்கையான முறையில் உங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க விரும்பினால், சில காலை நேர பழக்கங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த 9 காலை நேர பழக்கங்களையும் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் ஒரு மாதத்திற்குள் உங்கள் கொலஸ்ட்ரால் அளவு குறைந்துவிடும்.
ஆரோக்கியமான உணவு : ஊட்டச்சத்து நிறைந்த உணவை காலை நேரத்தில் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். பழங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், முழு தானியங்கள் ஆகியவற்றை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் 5 முதல் 10 கிராம் அளவு கரையக்கூடிய நார்ச்சத்து உணவை சாப்பிட்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 5% குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன.
க்ரீன் டீ : க்ரீன் டீயில் உள்ள கேடசின் என்ற ஆன்டி ஆக்ஸிடெண்ட் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. இனிமேல் காலையில் எழுந்ததும் வழக்கமான காஃபிக்கு பதிலாக க்ரீன் டீ பருகுங்கள்.
ஆரஞ்சு ஜூஸ் : காலையில் ஒரு க்ளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். ஆரஞ்சு பழத்தில் அதிகளவு ஃப்ளாவோனாய்டு உள்ளது. 4 வாரங்கள் தொடர்ந்து 750 மில்லி ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கலாம்.
காலை நடைபயிற்சி : காலையில் நடைபயிற்சி செல்வது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை உயர்த்துவதோடு கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
பாதாம் : பாதாமில் அதிகளவு நிறைவுறா கொழுப்புகள் உள்ளது. இது உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தவும் உதவும். ஆகையால், காலையில் ஒரு கைப்பிடியளவு பாதாம் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
தியானப் பயிற்சி : காலையில் தியானம் செய்வது மன அழுத்தத்தை குறைப்பதோடு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும். தினமும் 10 நிமிடங்களாவது அமைதியாக உட்கார்ந்து மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுங்கள்.
ஆலிவ் ஆயில் : சமையலுக்கு வெண்ணெய் அல்லது காய்கறி எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் ஆயிலை பயன்படுத்தும் போது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
Tags:
உடல் நலம்