திருவள்ளூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் தெரியவந்த நிலையில் தற்போது அதேபோன்று விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியிலும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டி நலத்திட்ட உதவிகள் பெற்று வந்தது தெரிய வந்துள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை இருந்த மோசடி அம்பலமானது. இதன் காரணமாக பள்ளிகளில் நடக்கும் மோசடிகளை தவிர்க்கவும் பள்ளி கல்வித்துறையின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் தமிழக அரசு ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளது.
அதாவது பள்ளிக்கல்வித்துறையில் ஐஏஎஸ் தரத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் இயக்குனர்கள் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட உள்ளனர். இந்த அதிகாரிகள் அரசின் நலத்திட்டங்கள், பள்ளிகள் மற்றும் பள்ளி கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வார்கள். இவர்களுக்கு மாதத்திற்கு ஒரு முறையாவது தங்கள் பொறுப்பின் கீழ் உள்ள மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் ஆய்வு செய்து 5-ம் தேதிக்குள் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:
கல்விச் செய்திகள்