வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!!

தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இத்தகைய தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும் கூட.

மேலும் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா? பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிதும் உதவியாக இருக்கும்.

இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் முறையானது ஜப்பானில் இருந்து வந்ததாகும். ஜப்பானிய மக்கள் தான் தினமும் காலையில் முகத்தை கழுவியதும் பற்களை துலக்காமல் கூட, 4 டம்ளர் தண்ணீரை குடிப்பார்கள். மேலுடம் அப்படி குடித்த பின்னர் 1 மணிநேரத்திற்கு எதுவும் சாப்பிடமாட்டார்கள். இதற்கு பெயர் தான் தண்ணீர் தெரபி. இதனால் தான் ஜப்பானிய மக்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கின்றனர். இங்கு அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.


நீரேற்றம்:

இரவு தூங்கி காலையில் எழுவதற்கு எப்படியும் குறைந்தது 7-8 மணி நேரமாகிவிடும். இந்த இடைப்பட்ட நேரத்தில் வயிற்றில் எதுவுமே இருக்காது, அந்த நேரத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவது இயற்கையானது. அதனால்தான், காலையில் வயிற்றில் தண்ணீர் குடிக்க சொல்கிறார்கள். நாம் வெறும் வயிற்றில் நிறைய தண்ணீர் குடித்தால், உடலுக்கு நீரேற்றம் உடனடியாக கிடைக்கிறது. மேலும், ஆரோக்கிய நன்மைகளுக்காக நாம் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சேர்த்து குடிக்கலாம்.

விழிப்புணர்வை அதிகரிக்கும்:

உடலில் நீர்ச்சத்துக்கள் குறைவாக இருந்தால் சோம்பல் மற்றும் குறைந்த ஆற்றலை ஏற்படுத்துகிறது. எனவே நாம் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் போது, ​​உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும், உடலை எப்போதும் சுறுசுறுப்பாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

மூளை செயல்பாடு அதிகரிக்கும்:

மனித மூளை சரியாக செயல்பட போதுமான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. நாம் சரியான நீரேற்றத்துடன் இருக்கும்போது, ​​​​நமது சிந்தனை தெளிவாகிறது.

நோய்களை எதிர்த்து போராடுகிறது:

தண்ணீர் குடித்த பிறகு போதுமான அளவு நீரேற்றமாக இருப்பதால், ​​​​இரைப்பை, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களை போக்க நமக்கு அதிக ஆற்றல் கிடைக்கிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது பல்வேறு நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. காலை முதல் நாள் முழுவதும் தொடர்ந்து தண்ணீர் குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தோல் மற்றும் முடியை மேம்படுத்துகிறது:

தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது, பளபளப்பான சருமத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. மேலும், முன்கூட்டிய ஏற்படும் வயதான தோற்றத்தை போக்க எப்போதும் நீரேற்றமாக இருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பது இரத்த ஓட்டத்தை சீராக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
Previous Post Next Post