ஆன்ட்ரோகிராஃபிஸ் பனிகுலாட்டா என்பது சிறியாநங்கைச் செடியின் உயிரியல் பெயர். இது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் எண்ணற்ற நோய்கள் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை சரிசெய்ய உதவுகிறது.
இது உணவில் புற்றுநோயை எதிர்த்து போராடும் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகிறது. இது மஞ்சள் காமாலை நோயை எதிர்த்து போராடுகிறது. இது சுவாச மண்டலத்தில் உள்ள தொற்றுக்களை குணப்படுத்த உதவுகிறது. கல்லீரல் கோளாறுகளை சரிசெய்யவும், காய்ச்சலை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வீக்கத்தைக் குறைத்து உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரிசெய்கிறது. இதில் உள்ள ஆண்ட்ரோகிராஃபோலிடெஸ் என்ற வேதிப்பொருள், வீக்கத்தை தடுத்து நிறுத்துகிறது. வைரஸ்களைக் கொல்கிறது. செல்களை சேதத்தில் இருந்து தடுக்கிறது. இத்தனை நன்மைகள் கொண்ட சிறியா நங்கையின் முழுப்பலன்கள் என்னவென்று விவரமாக தெரிந்துகொள்ளலாம்.
சிறியா நங்கையின் ஆரோக்கிய குணங்கள்
காய்ச்சலுக்கு சிகிச்சை
சிறியாநங்கை இலையை மென்று அல்லது அதை பொடி செய்து நாவில் சுவைத்து சாப்பிடும்போது அது சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணப்படுத்துகிறது. இது மலேரியா காய்ச்சல், ஹிஸ்டீரியா மற்றும் வலிப்பு ஆகியவற்றைத் தடுக்கிறது.
கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. மலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றச் செய்கிறது. இது உடல் புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது.
உடலில் ஒட்டுண்ணிகள் ஏற்படாமல் தடுக்கிறது
குடலில் நாடப்புழுக்கள் உள்ளிட்ட பல்வேறு புழுக்கள் தங்காமல் வெளியேற்றுகிறது. இந்த ஒட்டுண்ணிகள் உடலில் ஏற்படுத்தும் உபாதைகளில் இருந்து மீள உதவுகிறது. இது வயிற்றுப்போக்கு, அனீமியா ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.
அனீமியாவைப் போக்குகிறது
அனீமியா உடலில் போதிய ரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு இல்லாவிட்டால் ஏற்படுகிறது. ஹீமோகுளோபின் என்ற புரதம்தான் உடல் திசுக்களில் ஆக்ஸிஜனை கடத்த உதவுகிறது. சிறியாநங்ளை உடல் போதிய ரத்த சிவப்பணுக்களை உருவாக்கி, அனீமியாவின் அறிகுறிகளைப் போக்குகிறது.
சருமத்துக்கு நல்லது
சிறியாநங்கையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சருமத்தை சுத்தம் செய்கின்றன. இது சருமப் பிரச்னைகளைப் போக்குகிறது. ராஷ்கள், வீக்கம், அரிப்பு, எரிச்சல் உணர்வு, சருமம் சிவத்தல் ஆகிய பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது.
மனஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
சிறியாநங்கை வலிப்பு நோய், அல்சர், உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம், சிறுநீர் கடுப்பு மற்றும் சில மனநோய்களை குணப்படுத்த உதவுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது
சிறியாநங்கை கணைய செல்கள் அதிகளவில் இன்சுலின் சுரக்க உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது.
புற்றுநோய் தடுப்பு
சிறியாநங்கையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயைத் தடுக்கும். புற்றுநோயை மேலும் மோசமடைவதைக் குறைக்கும். இது கல்லீரல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
ரத்தத்தை சுத்திகரிக்கிறது
சிறியாநங்கை ரத்தத்தை சுத்திகரிக்கிறது. கல்லீரல், மஞ்சள் காமாலை மற்றும் சரும நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு கோளாறுகளை சரிசெய்கிறது. அசிடிட்டி, கல்லீரல் பிரச்னைகள் ஆகியவற்றைப் போக்குகிறது. இதன் வேர்ப்பொடி சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.
இத்தனை சிறப்புகள் நிறைந்த சிறியா நங்கையை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைத்தரும். எனவே இதைப் பயன்படுத்தி பலன்பெறுங்கள்
Tags:
உடல் நலம்