சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ14 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் ஐடிஐ (ITI)-தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
சென்னை மாநகர போக்குவரத்து கழக்கத்தில் அவ்வப்போது தொழில் பழகுநர் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கும் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவகளுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சியும் வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையிலான இந்த அப்ரெண்டீஸ் பயிற்சி பணிக்கு 500 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கூறியிருப்பதாவது:- மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், 2024 – 2025 ஆம் ஆண்டிற்கு மாதம் ரூ.14,000 – உதவித் தொகையுடன் ஐடிஐ (ITI)-தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு, 26.09.2024 அன்று மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், ஒரு வருடம் ஐடிஐ-தொழில் பழகுநர் பயிற்சி பெற தகுதியான ஐடிஐ பிரிவுகள் பற்றிய விவரம்:- மெக்கானிக் மோட்டார் வாகனம், மெக்கானிக் டீசல், எலக்ட்ரிஷியன், ஆட்டோ எலக்ட்ரிஷியன், ஃபிட்டர், டர்னர், பெயிண்டர், வெல்டர்) ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெற்றது. மாணவர்களுக்கு மாதம் ரூ.14,000/- உதவித் தொகை அளிக்கப்படும்.
ITI- தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு, 26.09.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 10:00 மணியளவில் மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டையில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். இந்த முகாமில், தகுதியுடையவர்கள் கலந்து கொண்டு, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
வேலைவாய்ப்பு