11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை


தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதன்படி பொதுத்தேர்வுகள் பின்வருமாறு:

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்:

12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 14ஆம் தேதி முடிவடைகிறது. மேலும் பொதுத் தேர்வு மார்ச் 3 தேதி தொடங்கி 25ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வரும் மே 9ஆம் தேதி வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.


11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்:

11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 21ஆம் தேதி முடிவடைகிறது. மேலும் பொதுத் தேர்வு மார்ச் 5ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி முடிகிறது. இதையடுத்து பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வரும் வரும் மே 19ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது இரண்டாம் பருவத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வரும் நிலையில், அரையாண்டு தேர்வு வரும் டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 23 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post