தீபாவளி பண்டிகையொட்டி தமிழக அரசின் அமுதம் அங்காடி ரேஷன் கடைகளில் இன்று முதல் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி, நவம்பர் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடைகள், இனிப்பு, பலகாரங்கள் ஆகும்.
தீபாவளிக்கு பலகாரங்களை வீடுகளில் செய்ய தொடங்கிவிட்டார்கள். இதை செய்ய முடியாதவர்கள் கடைகளில் ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இப்படியிருக்கையில் ஏழை எளிய மக்களால் மளிகை பொருட்கள் வாங்கி பலகாரம் செய்து தர இயலாது என்பதால் தமிழக அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது.
அதன்படி தீபாவளியையொட்டி குறைந்த விலையில் 15 மளிகை பொருட்களை மக்களுக்கு கொடுப்பது என்பதுதான். அந்த வகையில் ரூ 499 -க்கு மளிகை பொருள் தொகுப்பானது, அமுதம் பிளஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்.
இது தமிழக அரசின் அமுதம் அங்காடி, அமுதம் ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொகுப்பில் மொத்தம் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
கடுகு+ உளுத்தம் பருப்பு- 125 கிராம்
சீரகம்- 100 கிராம்
வெந்தயம்- 100 கிராம்
சோம்பு- 50 கிராம்
மிளகு- 50 கிராம்
மிளகாய்- 250 கிராம்
தனியா- 500 கிராம்
மஞ்சள் தூள் 50 கிராம்
புளி- 500 கிராம்
உப்பு- 1 கிலோ
உளுத்தம் பருப்பு - 500 கிராம்
கடலை பருப்பு- 200 கிராம்
பாசிப்பருப்பு- 200 கிராம்
வறுகடலை- 200 கிராம்
பெருங்காயத்தூள்- 15 கிராம்
மொத்தம் 3.840 கிலோ கொண்ட பொருட்கள் ரூ 499 க்கு கிடைக்கிறது.
Tags:
பொதுச் செய்திகள்